கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
முத்தாலி கிராமத்தில்
உழவரைத் தேடி வேளாண்மை -
உழவர் நலத்துறை திட்ட முகாம்
விவசாயிகள் பங்கேற்பு
ஓசூர். ஜுலை. 11. –
உழவரைத் தேடி வேளாண்மை -
உழவர் நலத்துறை”
ஓசூர் வட்டாரத்தில் உள்ள
முத்தாலி வருவாய் கிராமத்தில்
உழவரைத் தேடி வேளாண்மை -
உழவர் நலத்துறை”
என்ற திட்டத்தின் கீழ் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது, முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையில் செயல்பட்டு வரும்
மானியத்திட்டங்கள் பற்றியும்,
உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களின்
பயன்கள் பற்றியும்,
மண் வள மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றியும்,
சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான மானிய விவரங்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கமளித்தார்.
இம்முகாமில்
உயிர்ம வேளாண்மைச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள்,
வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்,
மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்கான வழிமுறைகள்,
அவற்றை சந்தைப்படுத்துவற்கான ஆலோசனைகள்/ வழிகாட்டுதல்கள் வழங்குதல் பற்றியும்,
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள் வழங்குதல்,
உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் பயனடைய தேவையான பதிவுகள் மேற்கொள்ளுதல்,
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்கள் பெற தேவையான உதவிகள் / ஆலோசனைகள் வழங்குதல்,
கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான ஆலோசனைகள்,
பண்ணை இயந்திர கருவிகள் வாங்குதல் மற்றும் வாடகை பெறுவதற்கு தேவையான வழிமுறைகள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
மேலும் இந்த முகாமில்...
வேளாண் பொறியியல் துறை,
பட்டுவளர்ச்சித்துறை அலுவலர்,
வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள்,
கூட்டுறவுத் துறை அலுவலர்,
மீன்வளத்துறை அலுவலர்கள்
கலந்து கொண்டு தங்கள்
துறையில் செயல்படும்
மானியத்திட்டங்கள் பற்றியும்,
பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்கள்.
இந்த முகாமில் வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
------------------------------------.