தருமபுரி மறை மாவட்டம்
ஓசூர் மறைவட்டம் – ஜுபிலி - 2025
மறை கல்வி மாணவ, மாணவிகளுக்கான
கலை விழா –
தருமபுரி மறைமாவட்ட
மேதகு ஆயர்
முனைவர் . லாரன்ஸ் பயஸ்
F.S.M. சபை மாநில தலைவி
மதர் ஆஞ்சலா
IVDP – நிறுவனர்
திரு. குழந்தை பிரான்சிஸ்
ஆகியோர் பங்கேற்பு
ஓசூர். நவ. 15. –
ஜுபிலி – 2025
மறை கல்வி மாணவ, மாணவிகளுக்கான
கலை விழா
தருமபுரி மறைமாவட்டம்
ஓசூர் மறை வட்டத்திற்கு உட்பட மத்திகிரியில்
ஜுபிலி – 2025
மறை கல்வி மாணவ, மாணவிகளுக்கான
கலை விழா சிறப்பாக நடைபெற்றது.
புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
மத்திகிரி நேதாஜிநகரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின்
அருகே இயங்கி வரும்
செயின்ட் சேவியர் அகாடமி
சிபிஎஸ்இ பள்ளி
அரங்கில் கலைவிழா நடைபெற்றது.
விழாவுக்கு
செயின்ட் சேவியர் பள்ளி முதல்வர்
மற்றும்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி பெரியநாயகம்
அவர்கள் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக
கிருஷ்ணகிரி IVDP – நிறுவனர்
திரு. குழந்தை பிரான்சிஸ்
அவர்கள் பங்கேற்று
குத்துவிளக்கேற்றி கலை விழாவை
தொடங்கி வைத்தார்.
கலை விழா தொடக்க பாடலுக்கு
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி மாணவிகள்
அழகிய வண்ணமயமான
பாரம்பரிய உடையில் தோன்றி
இறை பாடலுக்கு நடனமாடி
அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக
F.S.M. சபை மாநில தலைவி
மதர் ஆஞ்சலா
அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.
IVDP – நிறுவனர்
திரு. குழந்தை பிரான்சிஸ்
அவர்கள் பேசியதாவது –
இங்கு நிறைய ஆல்டர் பாய்ஸ் உள்ளனர்.
நானும் ஒரு காலத்தில் ஆல்டர் பாய்ஸ் ஆக இருந்திருக்கிறேன்.
ஆல்டர் பாய்ஸாக இருப்பது பெரிய பெருமையாகும்.
குழந்தைகள் நல்ல குழந்தையாக வளரவில்லை என்றால்
சமூகமே கெட்டுப்போய்விடும்.
இந்த வாழ்க்கை எவ்வளவு நாள் என்று தெரியாது…
நன்மைகளை செய்து கொண்டே இருப்போம்.
ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத்திட்டம் (IVDP) - 3 லட்சம் பேர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
பெண்கள் அதிகளவில் பயனடைந்து வருகிறார்கள்.
இது மேலும்பல லட்சங்களாக உயரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதை தொடர்ந்து
சிறப்பு விருந்தினராக
தருமபுரி மறைமாவட்ட
மேதகு ஆயர்
முனைவர். லாரன்ஸ் பயஸ்
அவர்கள்
பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மறைகல்வி மாணவ, மாணவிகளுக்கு
பைபிளில் இருந்து கேள்விகள் கேட்டு போட்டி நடத்தி பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து
கலை விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
தருமபுரி மறைமாவட்ட மேதகு ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கலை விழா போட்டிகள்
ஓசூர் மறை வட்டத்துக்குட்பட்ட மத்திகிரி,
டிவைன்நகர், ஒன்னல்வாடி, சூளகிரி, சிப்காட்,
ஓசூர் ஆகிய பங்குகளைச் சேர்ந்த
மறை கல்வி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த கலை விழாவில்
1. மாறுவேடப்போட்டி
2. மனப்பாடப் போட்டி,
3. நடனப்போட்டி,
4. பாடல் போட்டி
ஆகிய நான்கு விதமான போட்டிகளில்
மறை கல்வி மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.
1. மாறுவேடப்போட்டி
மாறுவேடப்போட்டியில்
மத்திகிரி,
சிப்காட்,
டிவைன்நகர்,
சூளகிரி,
ஒன்னல்வாடி,
ஓசூர்
ஆகிய பங்குகளில் இருந்து தலா 3 குழந்தைகள்
என மொத்தம் 18 குழந்தைகள் பங்கேற்றனர்.
இதில் அன்னை தெரசா, அந்தோனியார், டேவிட், அன்னை மரியாள் உட்பட பல்வேறு மாறுவேடங்களில் குழந்தைகள் தத்ரூபமாக வேடமிட்டு மேடையில் தோன்றி, அனைவரையும் பிரமிக்க வைத்தனர்.
2. மனப்பாடப்போட்டி
இந்த போட்டியில்
டிவைன்நகர்,
பாகலூர்,
மத்திகிரி,
ஓசூர்,
சிப்காட்,
ஒன்னல்வாடி
என்ற வரிசைப்படி பங்கு மறை கல்வி மாணவ, மாணவிகள் மனப்பாட போட்டியில் பங்கேற்றனர்.
இந்த போட்டியில்
பைபிள் வசனம் –
சங்கீதம் 91-வது அதிகாரம்
1-வது வசனம் முதல் 16-வது வசனம் வரை
மனப்பாடம் செய்து ஒப்பிக்க
மறை கல்வி மாணவர்களுக்கு
கொடுக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பெரும்பாலான மாணவ, மாணவிகள் வசனத்தை சரியாக கூறி அசத்தினர்.
3. நடனப்போட்டி
இந்த போட்டியில்
ஓசூர்,
சிப்காட்,
ஒன்னல்வாடி,
மத்திகிரி,
டிவைன்நகர்
என்ற வரிசைப்படி
பங்கு மறைகல்வி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் நவீன மற்றும் பாரம்பரியமிக்க அழகிய வண்ண ஆடைகளில் மாணவ, மாணவிகள் தோன்றி தெய்வீக பாடலுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடனமாடி, நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றனர்.
4. பாடல் போட்டி
இந்த போட்டியில்
சிப்காட்,
ஓசூர்,
மத்திகிரி,
ஒன்னல்வாடி,
டிவைன்நகர்
என்ற வரிசைப்படி பங்குகளின் மறைகல்வி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் மறை கல்வி மாணவ, மாணவிகள் குழுக்களாக இணைந்து
இறைபக்திமிக்க பாடல்களை
இனிமையாக பாடி,
நீதிபதிகள் மற்றும்
பார்வையாளர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர்.
கலைவிழாவில் நடந்த நான்கு போட்டிகளிலும்
வெற்றி பெற்றவர்களுக்கு
முதல்பரிசு,
இரண்டாம் பரிசு,
மூன்றாம் பரிசு
என 3 பரிசுகள் வழங்கப்பட்டது.
நீதிபதிகள்
இந்த அனைத்து போட்டிகளையும்
அருட்பணி குழுவினர் பார்வையிட்டு
போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.
ஆசிரியர்களுக்கு பாராட்டு
கலை விழாவில் - போட்டிக்கு மாணவர்களை தயார்செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அறுசுவை உணவு
கலை விழாவில் கலந்து கொண்ட
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
ஓசூர் மறைவட்டம் – ஜுபிலி - 2025
மறை கல்வி மாணவ, மாணவிகளுக்கான
கலை விழாவில்
மத்திகிரி பங்கு தந்தை
அருட்பணி. கிறிஸ்டோபர்
மற்றும்
ஓசூர் மறை வட்டத்துக்குட்பட்ட
டிவைன்நகர், ஒன்னல்வாடி, சூளகிரி, சிப்காட்,
ஓசூர் ஆகிய பங்குகளைச் சேர்ந்த
பங்கு தந்தையர்கள்,
அருட்சகோதரிகள்,
மற்றும்
மறை கல்வி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
-----------------------------.