கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூரில் “மேக்னம் மெகா டே”
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
ஓசூர் பில்டர்ஸ் அசோஸியேஷன்
இணைந்து
உள்வட்ட சாலை இருபுறமும்
அரச மரக்கன்றுகள் நடும் விழா
மற்றும்
அரசு மருத்துவமனை முன்பு
“இலவச காலை உயிருணவு”
வழங்கும் விழா
முன்னாள் பன்னாட்டு இயக்குநர்
அரிமா தனபாலன்
பங்கேற்பு
ஓசூர். செப். 21. –
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
“மேக்னம் மெகா டே”
என்ற பெயரில்
பில்டர்ஸ் அசோஸியேஷன் இணைந்து
இ.எஸ்.ஐ. முதல் சீதாராம் மேடு வரை உள்ள உள்வட்ட சாலையின் இருபுறமும் அரச மரக்கன்றுகள் நடும் விழா,
அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் விழா
உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மேக்னம் அரிமா சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில், அரசுப்பள்ளி,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்களை வழங்குவது,
ரத்த தானம் முகாம்கள், இலவச கண் சிகிச்சை
மருத்துவ முகாம்கள் நடத்துவது
உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலம் சார்ந்த
உதவிகள் செய்யும் பணியில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.
மேக்னம் மெகா டே
அதன் தொடர்ச்சியாக
ஓசூர் மாநகராட்சியில் செப்டம்பர் 20-ம் தேதியன்று மேக்னம் மெகா டே என்ற பெயரில்
மரக்கன்றுகள் நடும் விழா
மற்றும்
இலவச காலை உணவு வழங்கும் விழா
உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
பில்டர்ஸ் அசோஸியேஷன் இணைந்து
இ.எஸ்.ஐ. முதல் சீதாராம் மேடு வரை உள்ள உள்வட்ட சாலையின் இருபுறமும்
அரச மரக்கன்றுகள் நடும் விழா,
செப்டம்பர் 20-ம் தேதி சனிக்கிழமை அன்று
இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. ஆறுமுகசாமி
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
முன்னாள் பன்னாட்டு இயக்குநர்
அரிமா. கே. தனபாலன்,
பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை
தொடங்கி வைத்தார்.
பில்டர்ஸ் அசோஸியேஷன்
தலைவர் சேவியர்
மாவட்ட துணை ஆளுநர்
அரிமா. பொன்னுசாமி,
முன்னாள் மாவட்ட ஆளுநர்
அரிமா.ரவிவர்மா,
மீரா மருத்துவமனை நிறுவனர்
டாக்டர். அரிமா. சண்முகவேல்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொத்தம் 500 அரச மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமா 100 அரசமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இலவச காலை உயிருணவு
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா. ஆறுமுகசாமி
தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
முன்னாள் பன்னாட்டு இயக்குநர்
அரிமா. கே. தனபாலன்,
பங்கேற்று பொதுமக்களுக்கு இலவச காலை உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.
தினமும் இலவச காலை உணவு
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
அரசு மருத்துவமனை முன்பு
தினமும் 50 பேருக்கு காலை உணவு
இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த “மேக்னம் மெகா டே” நிகழ்வுகளில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
முன்னாள் தலைவர்
அரிமா. மகேந்திரன்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. K. பூபாலன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா S. விவேகானந்தன்,
பொருளாளர்
அரிமா Pa. அருண் லோகேஷ்,
பில்டர்ஸ் அசோஸியேஷன்
செயலாளர் சீதாராமன்
மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
------------------------------------------------.