கிருஷ்ணகிரி மாவட்டம்
பூசாரிப்பட்டி பகுதியில்
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
படேதலாவ் ஏரிக்கால்வாய்,
தூர்வாரும் பணிகள் துவக்கம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
அவர்கள்
ஆகியோர் பங்கேற்பு
ஓசூர். நவ. 6. –
“அடுத்த வருடம் பெய்யும்
வடகிழக்கு பருவமழைக்கு முன்பு
எண்ணேக்கொல் கால்வாய் மூலம், தென்பெண்ணையாற்றிலிருந்து தண்ணீர் படேதலாவ் ஏரிக்கு நிரப்புவதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும்” -
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
பூசாரிப்பட்டி பகுதியில் உள்ள
படேதலாவ் ஏரிக்கால்வாய்,
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
தூர்வாரும் பணிகளின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நவ.6-ம் தேதியன்று நடந்த இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
மற்றும்
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
ஆகியோர் கலந்துகொண்டு தூர் வாரும் பணிகளை துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி, நீர் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தென்மேற்கு பருவமழை மிகச் சிறப்பாக பெய்துள்ளதால், இவற்றின் மூலம் பெறப்படும் மழைநீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
பல இடங்களில் சமூக பொறுப்பு நிதியின் கீழ், கால்வாய்கள் தூர் வாரப்பட்டு ஏரிகள் நிரப்பப்பட்டு வருகிறது.
பாலேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளில் நீர் நிரப்புவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
பூசாரிப்பட்டி பகுதியில் படேதலாவ் ஏரி சுமார் 163 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரி 85.35 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
படேதலாவ் ஏரிக்கு வரக்கூடிய தண்ணீரை
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
வெண்ணம்பள்ளி ஏரி,
சுண்டம்பட்டி ஏரி,
ஒரப்பம் சின்ன ஏரி,
பெரிய ஏரி,
பாலிநாயனப்பள்ளி ஏரி,
ராசிப்பள்ளி ஏரி,
கெட்டூர் ஏரி,
செந்தாரப்பள்ளி ஏரி,
நாராயணப்பன் ஏரி,
மோடிகுப்பம் ஏரி,
நக்கல்பட்டி ஏரி,
பயாஸ்கான ஏரி,
காட்டகாரம் காசிம்கான் ஏரி,
ஆகிய 13 ஏரிகளுக்கு நிரப்புவதற்காக கிட்டதட்ட 18 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கால்வாய்களை சமூக பொறுப்பு நிதியின் மூலம் தூர்வாருவதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் கிரேன், ஹிட்டாச், மினி ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட 15 வாகனங்கள் மூலம் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடத்தரை ஆறு,
நாச்சிக்குப்பம் ஆறு,
மார்க்கண்டேயன் நதி
ஆகிய மூன்று ஆறுகளும் மாரச்சந்திரம் அணைக்கட்டு வழியாக படேதலாவ் ஏரிக்கு வருகிறது.
தற்போது படேதலாவ் ஏரி 50 சதவிகிதம் அளவு நீர் நிரம்பியுள்ளது.
படேதலாவ் ஏரியில் தூர்வாரும் பணி இன்று முதல் இரண்டு வார காலங்களுக்குள் முடிக்கப்பட்டு,
13 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும்.
அதேப்போல் மாவட்ட முழுவதும் உள்ள
ஏரிக் கால்வாய்களில் உள்ள
அடைப்புகள்,
முட்புதர்கள்
தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெய்யும் மழை
மாரச்சந்திரம் பகுதியில் உள்ள
மார்க்கண்டேயன் நதிக்கு
ஆதாரமாக உள்ளது.
அதேப்போல், எண்ணெக்கொல் அணைக்கட்டு பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த வருடம் பெய்யும்
வடகிழக்கு பருவமழைக்கு முன்பு
எண்ணெக்கொல் கால்வாய் மூலம் தென்பெண்ணையாற்றிலிருக்கும் தண்ணீர் படேதலாவ் ஏரியில் நிரப்புவதற்கான
நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளின் விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீரும் கிடைக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஊரக வளர்ச்சித்துறை சார்பாக,
1097 ஏரிகளில் 600 ஏரிகள் முழுவதும் நீர் நிரம்பி உள்ளது.
300 ஏரிகள் பாதியளவு நிரம்பி உள்ளது.
200 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேப்போல் நீர்வளத்துறை சார்பாக
87 ஏரிகள் உள்ளன.
இந்த 87 ஏரிகளில் 77 ஏரிகள் நிரம்பியுள்ளன.
10 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி புரிந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்புவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர்
திரு.முத்துராஜ்,
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்
திரு.அறிவொளி,
உதவி பொறியாளர்
திரு.சையத் ஜஹீருதின்,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்
மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.