கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூரில் மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான
மறுவாழ்வு இல்லத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஒசூர். ஜூலை. 19. -
ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாகலூர் சாலையில் நல்லூர் சோதனைச் சாவடிக்கு அருகே உள்ள
மனநலன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அபாலா மறுவாழ்வு இல்லத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
தினேஷ்குமார். IAS.
ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக
9 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில்
61 ஆண் குழந்தைகள்,
110 பெண் குழந்தைகள்
என மொத்தம்
171 குழந்தைகள்
தங்கி படித்துவருகின்றனர்.
தன்னார்வ நிறுவனத்தால் நடத்தப்படும்
ஸ்ரீ நிவேதிதா சேவா டிரஸ்ட் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தையும்,
ஸ்ரீநிவேதிதா சேவா டிரஸ்ட் பிற்காப்பு இல்லத்தையும்
ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும்
உணவு,
உணவு சமைப்பதற்கான பொருள்கள்,
குடிநீர்,
கழிப்பறை
ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அதன்பிறகு,
மத்திய குழந்தை தத்து வள மைய வலைதளம்,
குழந்தைகள் பதிவு,
தத்து வழிமுறைகள்,
தத்து பெற்றோரின் இல்ல ஆய்வு
ஆகியவற்றின் அறிக்கை,
தத்து வழிமுறைகள்
ஆகியவற்றின் முன்னேற்றங்களைக்
கேட்டறிந்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
குழந்தைகளின் கல்வி நலனில்
அதிக அக்கறை செலுத்த
இல்ல பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து,
அபாலா மறுவாழ்வு இல்லம்
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் பதிவு பெற்ற மனநலன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அபாலா மறுவாழ்வு இல்லத்தை நேரில் பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்து,
இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைப் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணியின்போது,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
முரு கேசன்,
வட்டாட்சியர் (பொ)
பரிமேலழகர்,
வட்டார வளர்ச்சி அலுவலர்
விஜயா,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா)
கஸ்தூரி,
மனநலன் மருத்துவர்
சரவணகுமார்,
அபாலா இல்லத்தின் நிர்வாகி
கௌதமன்
மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.