மாபெரும் கல்விக்கடன் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
01.10.2025 முதல் 20.11.2025 வரை
92 பயனாளிகளுக்கு
ரூ.8 கோடியே 30 லட்சம் மதிப்பில்
கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
பங்கேற்பு
ஓசூர். நவ. 26. –
மாபெரும் கல்வி கடன் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில்,
உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு,
மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட முன்னோடி வங்கி மற்றும்
அனைத்து வங்கிகள்
இணைந்து நடத்திய
மாபெரும் கல்வி கடன் முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் முன்னிலையில்
இன்று (26.11.2025) குத்து விளக்கு ஏற்றி
துவக்கி வைத்து,
37 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு
ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பிலான
கல்விக் கடனுதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் கல்வி பயில பொருளாதாரம்
ஒரு தடையாக இருக்க கூடாது
என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்
மாபெரும் கல்விக் கடன் வழங்கும்
முகாம்கள் நடத்தப்பட வேண்டும்
என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
09.10.2025 அன்று பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரியில்,
கல்விக்கடன் வழங்கும் முகாம் அமைக்கப்பட்டு
35 மாணவ, மாணவிகளுக்கு
ரூ.3 கோடியே 41 லட்சம் மதிப்பிலான
கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று,
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும்
வெளி மாவட்டங்களில் குடியிருந்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயின்று வரும்
மாணாக்கர்கள் பங்கேற்று
பயனடையும் வகையில்,
மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட முன்னோடி வங்கி மற்றும்
அனைத்து வங்கிகள்
இணைந்து மாபெரும் சுல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில்,
இந்தியன் வங்கி,
பாரத ஸ்டேட் வங்கி,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
கனரா வங்கி,
தனலட்சுமி வங்கி,
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா,
பேங்க் ஆப் இந்தியா
உள்ளிட்ட வங்கிகள் சார்பாக
வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கலந்து கொண்ட
கல்லூரி மாணவ, மாணவியர்களில்
37 நபர்களுக்கு ரூ.3 கோடியே 65 லட்சம்
மதிப்பில் கல்விக் கடனுதவிகள்
வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
01.10.2025 முதல் 20.11.2025 வரை
92 பயனாளிகளுக்கு
ரூ.8 கோடியே 30 லட்சம் மதிப்பில்
கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம்
வழங்கி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
எந்த ஒரு குழந்தையும்
அதன் கனவை நோக்கிச் செல்ல
பொருளாதாரம் ஒரு தடையாக
இருக்க கூடாது
என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,
சிபில் ஸ்கோர் (Cibil Score) குறைவாக உள்ள
விண்ணப்பதாரர்களுக்கு
கல்விக் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்விக் கடன் பெற
வித்யா லட்சுமி போர்ட்டலில்
(Vidya Lakshmi Portal)
விண்ணப்பித்து, விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டிருந்தால்,
கல்வி கடனுதவி பெற
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்
அவர்களை (கைபேசி எண்:9443136918)
தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்
பட்சத்தில்,
கண்டிப்பான முறையில் கல்விக் கடன் ஏற்படுத்தி
தர மாவட்ட நிர்வாகம் அனைத்துவகையான
முயற்சிகளையும் எடுக்கும்.
இதுவரை கல்விக் கடன் பெற விண்ணப்பித்து
நிராகரிக்கப்பட்ட 3540 நபர்களின்
விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு,
அவர்களை மறுபடியும் விண்ணப்பிக்க வைத்து,
அவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகள்
கல்விக் கடனை பெற்று,
சிறந்த முறையில் கல்வி கற்று
தங்களுக்கு விருப்பமான துறையில்
உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தைய்யா,
இந்தியன் வங்கி
முன்னோடி வங்கி மேலாளர் (பொ)
திரு.வெங்கடேசன்,
செயின்ட் பீட்டர்ஸ்
மருத்துவக் கல்லூரி முதல்வர்
திரு.ராஜா முத்தையா,
துணை முதல்வர்
திரு.ஆனந்த் ரெட்டி,
கண்காணிப்பாளர்
திரு.கிரீஷ் ஹோங்கல்,
நிதி சார் கல்வி மைய ஆலோசகர்
திரு.பூசுவாமி,
வட்டாட்சியர்
திரு.குணசிவா
மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள்
கலந்து கொண்டனர்.
--------------------------------.