கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பெரியார் நகர்
அருள்மிகு ஸ்ரீ வேல்முருகன் கோயிலில்
அம்மனிடம் சக்தி வேல் வாங்குதல்,
சூரசம்ஹாரம்
-
திருக்கல்யாண வைபவம்
மகா ஸ்கந்த சஷ்டி பெருவிழா
கோலாகலம்
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ்.மாதேஸ்வரன்
பங்கேற்பு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஓசூர். அக். 28. –
அருள்மிகு ஸ்ரீவேல் முருகன் ஆலயத்தில்
மகா ஸ்கந்த சஷ்டி பெருவிழா
ஓசூர் பெரியார் நகரில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீவேல் முருகன் ஆலயத்தில்
மகா ஸ்கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில்
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ்.மாதேஸ்வரன்
கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில்அருள்மிகு ஸ்ரீவேல்முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் மகா ஸ்கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல நடப்பாண்டில் அக்.22-ம் தேதி முதல் அக்.28-ம் தேதி வரை
7 நாட்கள் மகா ஸ்கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அக்.22-ம் தேதி புதன்கிழமை
ஸ்ரீவேல்முருகன் ஆலயத்தில் கலச ஸ்தாபனத்துடன் விழா தொடங்கியது.
காலை 6 மணிக்கு ஸ்ரீவேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
சிறப்பு அலங்காரம் செய்து
தீபாராதனை,
யாகசாலை பூஜை,
நவகலச பூஜை,
ஹோமங்கள்,
பூர்ணாஹுதி,
தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு
சுப்ரமண்ய சகஸ்ரநாம அர்ச்சனை,
யாகசாலை பூஜை
உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அக்.23-ம் தேதி வியாழக்கிழமை
காலை 6 மணிக்கு ஸ்ரீவேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் தீபாராதனை , யாகசாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு சுப்ரமண்ய சகஸ்ரநாம அர்ச்சனை யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அக்.24-ம் தேதி வெள்ளிக்கிழமை
காலை 6 மணிக்கு ஸ்ரீவேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் தீபாராதனை , யாகசாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு சுப்ரமண்ய சகஸ்ரநாம அர்ச்சனை யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அக். 25-ம்தேதி – சனிக்கிழமை
காலை 6 மணிக்கு ஸ்ரீவேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் தீபாராதனை , யாகசாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு சுப்ரமண்ய சகஸ்ரநாம அர்ச்சனை யாகசாலை பூஜை நவகலச பூஜை, சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை, ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அக். 26-ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை
காலை 6 மணிக்கு ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் தீபாராதனை , யாகசாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
அம்மனிடம் சக்தி வேல் வாங்குதல்,
மாலை 5.30 மணிக்கு
அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து
சுப்ரமண்ய சகஸ்ரநாம அர்ச்சனை யாகசாலை பூஜை நவகலச பூஜை,
ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்ச்சி
அக். 27-ம் தேதி திங்கட்கிழமை
காலை 5 மணிக்கு -
ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் தீபாராதனை , யாகசாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 3.30 மணிக்கு
ஸ்கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரனை முருக கடவுள் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் முன்பாக
நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”
என முழங்கி முருகப்பெருமனை தரிசித்தனர்.
சாந்தி அபிஷேகம்,
அதனை தொடர்ந்து சாந்தி அபிஷேகம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தி பக்தர்களுக்கு பருப்பு பாயாசம், பிரசாதம் வழங்கப்பட்டது.
திருக்கல்யாண வைபவம்
அக். 28-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
காலை7.30 மணிக்கு ஸ்ரீவேல்முருகன் சுவாமிக்கு
கலச அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
காலை 10.45 மணிக்கு
வள்ளி தெய்வானை உடனுறை
ஸ்ரீவேல் முருகப்பெருமானுக்கு
திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த கல்யாண வைபவத்தில்
பட்டாடை உடுத்தி, வண்ணமலர்களின் சிறப்பு அலங்காரத்தில்
வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீவேல்முருகப்பெருமான்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கல்யாண விருந்து
அந்த கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.