“வேகம் சோகத்தை தரும்
நிதானம் நிம்மதியை தரும்”
கிருஷ்ணகிரி மாவட்டம்
மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில்
தேன்கனிக்கோட்டை காவல்துறை சார்பில்
சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு பேரணி.
தேன்கனிக்கோட்டை ஜன. 24. -
தேன்கனிக்கோட்டையில்
காவல் துறை சார்பில்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது.
மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில்
தேன்கனிக்கோட்டை காவல் நிலையம்
முன்பு புறப்பட்ட இந்த பேரணியை
தேன்கனிக்கோட்டை
காவல் நிலைய ஆய்வாளர்
திரு. கணேஷ்குமார்
துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில்
சப்-இன்ஸ்பெக்டர்
திரு. நாகராஜன்
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்
திரு. நாகபூஷணம்
மற்றும் போலீசாருடன்
பள்ளி மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் சாலை பாதுகாப்பு
குறித்த விழிப்புணர்வு வாசகங்கள்
எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு,
“வேகம் சோகத்தை தரும்
நிதானம் நிம்மதியை தரும்”
“லைசன்ஸ் வாங்க எட்டு போடு,
உயிரைக் காக்க ஹெல்மெட் போடு”
“போதையில் பயணம்
பாதையில் மரணம்”
“காரில் செல்பவர்கள்
சீட் பெல்ட் அணிய வேண்டும்”
என்பது போன்ற
விழிப்புணர்வு வாசகங்களை
முழக்கமிட்டபடி
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தியவாறு
பேரணியாக சென்றனர்.
இந்த போரணி தேன்கனிக்கோட்டை நகரின் அஞ்செட்டி சாலை, மகாத்மாகாந்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.
---------------------------------------.