ஓசூரில்
விடுதலை சிறுத்தைகள்
கட்சி சார்பில்
சட்டமேதை அம்பேத்கர்
அவர்களை
அவமதித்து பேசிய
மத்திய அமைச்சர் அமித்ஷா
பதவி விலக வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர். டிச. 20. –
ஓசூரில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பதவி விலக வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் மகாத்மா காந்தி சாலை, காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் சட்டபேரவை தொகுதி
செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
இதில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷா உருவப்படத்தை விசிகவினர் எரிக்க முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து விசிகவினர், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் எம்.ஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.