பொங்கல் பரிசுத் தொகுப்பு
ரூ.3000 ரொக்கம்
1கிலோ பச்சரிசி -
1கிலோ சர்க்கரை -
1முழுக் கரும்பு
விலையில்லா வேட்டி, சேலை.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
நியாயவிலைக் கடைகளில்
ரூ.3 ஆயிரம் ரொக்கம் உட்பட
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
மாநகர மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா
பங்கேற்பு
ஒசூர், ஜன.9. -
தமிழகம் முழுதும்,
நியாயவிலைக் கடைகள் வாயிலாக,
குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா
ரூ 3 ஆயிரம் ரொக்கம்,
1கிலோ பச்சரிசி,
1கிலோ சர்க்கரை,
1 முழுக் கரும்பு
விலையில்லா வேட்டி, சேலை
அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு
வினியோகத்தை (ஜனவரி 08)
முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள்
தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து ஓசூர் நகரம் முழுவதும் 31 கடைகளில் அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
ஓசூர் நகரப் பகுதியில் காமராஜர் காலனியில்
உள்ள நியாயவிலைக்கடையில்
நடந்த நிகழ்வில்
மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா
பங்கேற்று பொதுமக்களுக்கு
ரூ.3 ஆயிரம் ரொக்கம் உட்பட பொங்கல் பரிசு தொகுப்புகளை விநியோகித்தார்.
பின்னர்
மேயர் பேசும்போது:
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
பொதுமக்களுக்கு தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்வதில் இந்தியாவின் முன்னோடி முதலமைச்சராக உள்ளார் .
அவர் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை கைம்பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் 5% சதவீதம் வட்டியில்,
15.8 லட்சம் பயனாளிகளுக்கு
ரூ 6000 கோடி நகை கடன் தள்ளுபடி,
ரூ 2756 கோடி மகளிர் குழு கடன் தள்ளுபடி
15.8 லட்சம் மகளிர் பயன்பெற்றனர்.
மகளிர் சுய உதவி குழு
கடன் உச்சவரம்பு உயர்வு ரூ. 12 லட்சத்திலிருந்து
ரூ 20 லட்சமாக உயர்த்தினார்.
நியாய விலை கடைகளில் ரூ 1.5 கோடி
மதிப்பிலான பனைவெல்லம் விற்பனை.
46.75 லட்சம் விவசாயிகளுக்கு
ரூ. 35 ஆயிரத்து 850 கோடி பயிர் கடன்கள்.
வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.6892 கோடி வர்த்தகம்.
கூட்டுறவு மருந்தகங்களில்
20% தள்ளுபடியுடன்
ரூ.457 கோடி மருந்துகள் விற்பனை .
கால்நடை வளர்க்க வட்டியில்லா கடன்
ரூ 6.52 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர்.
மலைவாழ் பழங்குடியினர் நலனுக்காக
14 புதிய பெரும் பல்நோக்கு
கூட்டுறவு சங்கங்கள் தொடக்கம்
என பல திட்டங்கள் கொடுத்தவர்
நமது தமிழக முதல்வர்
வரும் 2026ஆண்டிலும் அவர் பல திட்டங்களை
வழங்க உள்ளார் என்றென்றும்
அவர்களுக்கு பொதுமக்கள் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட பொருளாளர் சுகுமாரன்,
பகுதி செயலாளர் ராமு,
இலக்கிய அணி சக்திவேல்,
அப்பகுதி கவுன்சிலர் மோசின் தாஜ் நிசார் .
திமுக குமார் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
--------------------------------------.