ஒசூர் வித் யூ கல்வி மற்றும்
சமூக அறக்கட்டளை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூரில் செயல்பட்டு வரும்
வித் யூ கல்வி மற்றும்
சமூக அறக்கட்டளை சார்பில்
தேன்கனிக்கோட்டை
ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில்
சாலை போக்குவரத்து,
பாதுகாப்பு விழிப்புணர்வு
பயிற்சி வகுப்பு
ஒசூர். பிப். 5. -
தேன்கனிக்கோட்டை ஜான்பிரிட்டோ
மேல்நிலைப்பள்ளியில்
சாலை போக்குவரத்து,
பாதுகாப்பு விழிப்புணர்வு
பயிற்சி வகுப்பு
ஓசூரில் செயல்பட்டு வரும்
வித் யூ கல்வி மற்றும்
சமூக அறக்கட்டளையின் சார்பில்
பிப்ரவரி 3-ம் தேதியன்று
தேன்கனிக்கோட்டை ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில்
சாலை போக்குவரத்து,
பாதுகாப்பு விழிப்புணர்வு
பயிற்சி வகுப்பு
சிறப்பாக நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில்
பயிற்சியாளர்
திரு.முத்துசாமி
அவர்கள் பங்கேற்று
மாணவ, மாணவிகளுக்கு
சாலை போக்குவரத்து
பாதுகாப்பு
குறித்து
விளக்கமாகவும் முழுமையாக புரிந்து
கொள்ளும் வகையில்
செய்திகளை கூறி சிறப்பாக
பயிற்சி அளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மேலும் இந்த விழிப்புணர்வு
பயிற்சி வகுப்பில்
பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு
குறித்த செய்திகளும்
சூழல் மேம்பாட்டுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சி வகுப்பில்
ஒசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவன உறுப்பினர்
திரு.முருகேசன்
அவர்களும் பங்கேற்று
மாணவர்களுக்கு
சுற்றுச்சூழல்,
இயற்கையைக் காத்தல்
குறித்த செய்திகளை வழங்கி
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வுக்கு
அனுமதி தந்து ஒத்துழைப்பும்
அளித்து சிறப்பித்த
ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின்
தலைமையாசிரியர்
அருட்தந்தை
அவர்களுக்கும்
பள்ளியின் உதவி தலைமையாசிரியரும்
அறக்கட்டளையின்
மதிப்புமிகு உறுப்பினருமான
திரு.ஜோனதாஸ்
அவர்களுக்கும்
பயிற்சியாளர்
திரு.முத்துசாமி
அவர்களுக்கும்
வித் யூ கல்வி மற்றும் சமூக
அறக்கட்டளையின் தன்னார்வலர்
திரு.முருகேசன்
அவர்களுக்கும்
அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த
நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
--------------------------------------.