ஓசூர் பகுதி விவசாயிகள்
சம்பா சிறப்பு பருவ
நெல் பயிருக்கு
காப்பீடு செய்ய
31 - ம் தேதி கடைசி நாள்
ஓசூர். அக். 24. –
ஒசூர் பகுதி விவசாயிகள், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என,
ஒசூர் வட்டார வேளாண்மை
உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது -
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா
(PMFBY) திட்டம்
தழிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாநில அரசின் மான்யத்துடன் காரீப், சிறப்பு மற்றும் ராபி 2025 பருவங்களில் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்ட நோக்கம்,
நோய்,
வறட்சி,
புயல்,
ஆலங்கட்டி மழை,
மண்சரிவு,
வெள்ளம்
போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டால்,
விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது,
விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்து,
அவர்களை தொடர்ந்து விவசாயத்தில் நிலைபெற செய்வது.
மேலும், நவீன வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகளை உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதுடன்,
உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு தொடர்ந்து கடனுதவி கிடைப்பதை உறுதிபடுத்தி,
வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகும்.
நெல் பயிர் காப்பீடு
ஒசூர் வட்டாரத்தில் அனைத்து பிர்காவிலும்
நெல் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் இணைய முடியும்.
பயிர் கடன்,
விவசாய நகைக்கடன்
பெறும் அனைத்து விவசாயிகளும் சேரலாம்.
மேலும், பயிர் கடன் பெறாத விவசாயிகளும், விருப்பத்தின் பேரில் இணைய முடியும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், காப்பீட்டு தொகையில் 2 சதவீதத்தை பிரிமியமாக செலுத்த வேண்டும்.
அக்.31-ம்தேதி கடைசி நாள்
இத்திட்டத்தில் ஒசூர் வட்டார விவசாயிகளுக்கு சம்பா நெல் காப்பீட்டு செய்ய கொள்ள காலக்கெடு 31.10.2025 வரை உள்ளது.
1 ஏக்கருக்கான சம்பா நெல் காப்பீடு தொகை
ரூ.38300/-ல் பயிர் காப்பீட்டு செய்ய விரும்பும்
விவசாயிகள் அனைவரும்
ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக
ரூ.575.50/- மட்டும் செலுத்தினால் போதும்.
மேலும் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறா விவசாயிகள்
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ,
பொது சேவை மையங்கள் Common Service Centre (CSC) மூலமாகவோ,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவோ
விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்
பதிவு செய்ய
தேவைப்படும் ஆவணங்கள்
முன்மொழி படிவம்,
சிட்டா,
நடப்பு ஆண்டு அடங்கல்,
வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,
கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் அடங்கல்,
ஆதார் அட்டை நகல்.
மேலும் விபரம் அறிய,
அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு
ஒசூர் வட்டார வேளாண்மை
உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------.