இந்திய நாட்டின்
77- வது இராணுவ தினம்
கொண்டாட்டம்
ஜனவரி – 15 –
இந்திய இராணுவ தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 15. –
இந்திய நாட்டின்
77-வது இராணுவ தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ஆம் நாள் இந்திய
இராணுவ தினம்
கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இந்தியா தனது 77வது இராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. இராணுவ வீரா்களை மரியாதை செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
லெப்டினன்ட்
ஜெனரல்
கே. எம். காரியப்பா இந்திய இராணுவத்தின்
தலைமைத் தளபதி பதவியானது,
1949 ஆம் ஆண்டு ஆங்கிலேய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிரான்சிஸ் புட்சா் என்பவரிடமிருந்து, இந்தியாவைச் சோ்ந்த லெப்டினன்ட் ஜெனரல் கே. எம். காரியப்பா என்பவரின் கைகளுக்கு மாறிய நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயா்களின் கையிலிருந்த ஆட்சி அதிகாரம் இந்தியா்களின் கைகளுக்கு மாறிய நிகழ்வு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். இரண்டாவதாக இந்திய நாட்டிற்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த எண்ணற்ற இராணுவ வீரா்களை கௌரவப்படுத்தவும் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
1895 ஆம் ஆண்டு
ஏப்ரல் 1 அன்று இந்திய
இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது.
எனினும் இந்தியா விடுதலை அடைந்த பின்பு, 1949 ஆம் ஆண்டு ஜனவரி15 அன்று தான் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி பதவி இந்தியரின் கைக்கு மாறியது. ஆகவே அந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் நாள் இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
ஃபீல்ட் மார்ஷல் காரியப்பா
என்பவா் யார்?
கோதண்டேரா மாதப்பா காரியப்பா என்பவா் சுதந்திர இந்தியாவின் முதல் இராணுவத் தலைமைத் தளபதி ஆவார். இவா் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்திய இராணவத்தின் மேற்குப் படைப்பிரிவை முன்னின்று நடத்திச் சென்றார்.
அதற்காக இந்தியாவின் உயா்ந்த இராணுவ விருதான ஃபீல்ட் மார்ஷல் ஆஃப் இந்தியா (Field Marshal of India) என்ற பட்டத்தைப் பெற்றார். அவரோடு சோ்ந்து
சாம் மனேக்ஷா
என்பவரும் இந்த பட்டத்தைப் பெற்றார்.
காரியப்பா கா்நாடக மாநிலம், குடகு(கூர்க்) மாவட்டத்தில் உள்ள சனிவாரசந்தை
என்னும் மலை கிராமத்தில் பிறந்தார்.
இவரின் ராணுவ சேவையை பாராட்டி
குடகு மாவட்ட தலைநகர் மடிகேரி நகரில்
கே.எம். காரியப்பாவுக்கு சிலை நிறுவி
மரியாதை செய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 30 ஆண்டுகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். இங்கிலாந்தின் கம்பா்லி நகாரில் உள்ள இம்பீரியல் டிஃபன்ஸ் கல்லூரியில் (Imperial Defense College) இராணுவ பயிற்சி பெற இந்தியாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் இருவரில் ஒருவா் ஆவார்.
மேலும் அவா் இந்திய இராணுவ தலைமைத் தளபதி பதவியைப் பெறுவதற்கு முன்பாக இந்திய இராணுவத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகளின் தளபதியாக பணி செய்து வந்தார்.
இந்திய இராணுவத்தின்
விருதுவாக்கு என்னவென்றால் "தன்னலத்தை விட பிறா்நலத்திற்காக சேவை செய்ய வேண்டும்" ("Service before self") என்பதாகும்.