ஒசூர் ஐடிஐ
தொழிற்பழகுநர் பயிற்சி
சேர்க்கை முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்,
6.02.2026 வெள்ளிக்கிழமை அன்று
கிருஷ்ணகிரி,
சேலம்,
தருமபுரி
நாமக்கல்
ஆகிய மாவட்டங்கள் சார்ந்த
சேலம் மண்டல அளவிலான
தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
ஓசூர். பிப். 01. -
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவு
சார்பாக
தொழிற்பழகுநர் பயிற்சி
சேர்க்கை முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்,
கிருஷ்ணகிரி,
சேலம்,
தருமபுரி
நாமக்கல்
ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த
சேலம் மண்டல அளவிலான
தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்
06.02.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவு சார்பாக
கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல்
ஆகிய மாவட்டங்கள் சார்ந்த
சேலம் மண்டல அளவிலான
தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்
(Trade Apprentice Engagement Fair - 2025-2026)
06.02.2026 அன்று ( ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. )
இம்முகாமில் சேலம் மண்டலத்தில் உள்ள
அரசு பொதுத்துறை நிறுவனங்களான
அரசு போக்குவரத்து கழகம்,
விரைவு போக்குவரத்துக் கழகம்
மற்றும்
டாடா எலக்ட்ரானிக்ஸ்,
அசோக் லேலாண்ட்,
டிவிஎஸ் மோட்டார்,
டைட்டன் கம்பெனி
ஆகிய 50-க்கும் மேற்பட்ட
முன்னணி தனியார் நிறுவனங்கள்
கலந்து கொண்டு
தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ்
தொழிற்பழகுநர் பயிற்சிக்கு
ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள்,
10-ம் வகுப்பு,
12-ம் வகுப்பு,
டிப்ளமோ
மற்றும்
டிகிரி (BE/BA/BSc/B.com...etc)
கல்வி தகுதி உடையவர்களை
தேர்வு செய்ய உள்ளார்கள்.
எனவே
அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-ல்
பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள்
தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்
பெற்று பயன்பெறுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்
10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும்
கல்வித்தகுதி உடையவர்கள்
நேரடியாக தொழிற்சாலைகளில்
பிரெஸ்ஸர் அப்ரண்டீஸாக சேர்ந்து
தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்
(NAC) பெறலாம்.
டிப்ளமோ மற்றும்
டிகிரி (BE/BA/BSc/B.com..etc)
கல்வி தகுதி உடையவர்கள்
ஆப்சனல் (Optional Trade) பிரிவுகளில்
ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று
NSDE/SSC வழங்கும்
அப்ரண்டீஸ்சிப் சான்றிதழ்
பெறலாம்.
உதவித்தொகை
ஒரு வருட பயிற்சிக்கு உதவித்தொகை மாதம்
ரூ.15,000/- முதல் ரூ. 21,000/- வரை
நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் இந்திய அளவிலும்,
அயல் நாடுகளிலும்
அதிக ஊதியத்தில் நிரந்திர வேலை பெறும் வாய்ப்பு உள்ளது,
அரசு வேலை வாய்ப்பிற்கு வயது வரம்பில் ஓராண்டு சலுகையும்,
மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில்
வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மேலும் நிறுவனங்களில்
நல்ல தொழில் அனுபவம் பெற்று
தொழில் முனைவோராகும்
வாய்ப்பும் உள்ளது.
எனவே
ஐடிஐ,
10-ம் வகுப்பு,
12-ம் வகுப்பு,
டிப்ளமோ
மற்றும்
டிகிரி (BE/BA/BSc/B.com..etc)
கல்வி தகுதி உடையவர்கள்,
இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி வரும்
06.02.2026 அன்று
ஒசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும்
சேர்க்கை முகாமில் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறும்,
மேலும் விவரங்களுக்கு
M/167, TNHB Phase-II,
இராயக்கோட்டை சாலை,
கிருஷ்ணகிரி.
எனும் விலாசத்தில் செயல்பட்டுவரும்
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,
உதவி இயக்குநர் அவர்களை நேரிலும்
அல்லது
9787970227,
7598058340,
9442286874,
9080755060,
9976208265
ஆகிய அலைபேசி எண்ணிலும்
தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------.