ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
பெற்றோர் சிறப்புக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
6-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை பயிலும்
400 மாணவர்களுடைய
பெற்றோருக்கு சிறப்புக் கூட்டம்
இடைநின்ற மாணவர்களை மீண்டும்
பள்ளியில் சேர்க்க கூட்டத்தில் முடிவு
125 பெற்றோர் பங்கேற்பு
ஒசூர். பிப். 18. -
பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளி
ஒசூர் மாநகராட்சி 3-வது வார்டில்
இயங்கி வரும் பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளியில்
6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை
படிக்கின்ற (400) மாணவர்களுடைய
பெற்றோர் பங்கேற்ற சிறப்புக் கூட்டம்
நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்
6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களின்
தந்தை அல்லது தாய் யாரேனும் ஒருவர் கட்டாயமாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
என்ற தகவல் ஆசிரியர் மூலமாக
பெற்றோர்களுக்கு
தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
புதன்கிழமை (18-02-2026) மாலை நடந்த
இந்த சிறப்பு கூட்டத்திற்கு
தலைமை ஆசிரியர்
திரு.பொன் நாகேஷ்
அவர்கள்
தலைமை வகித்து,
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோரை வரவேற்று உரையாற்றினார்.
இதில் சுமார் 125 பெற்றோர்
கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில்
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
திரு. லக்கப்பா.
மற்றும்
பள்ளி மேலாண்மை
குழு தலைவி
திருமதி. விஜி.
ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
🌸இந்த சிறப்பு கூட்டத்தில்
விவாதிக்கப்பட்ட பொருள்கள் .....
🌟 எட்டாம் வகுப்பில் படிக்கின்ற
128 மாணவ மாணவியர்களை தரமான கல்வி மற்றும் ஒழுக்கத்துடன் ஒன்பதாம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்புதல்.
🌟 தினந்தோறும் அதிக மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதை பற்றி ஆலோசித்தல்.
🌟 பள்ளியில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கின்றனரா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுதல்.
🌟 தினந்தோறும் ஆசிரியர்கள் வகுப்பில் வழங்கும் வீட்டுப்பாடங்களை மாணவர்கள் முடிக்காமல் வருவதைப் பற்றி ஆலோசித்தல்.
🌟 ஆறாம் வகுப்பில் இருந்து
எட்டாம் வகுப்பு வரை படிக்கின்ற
அனைத்து மாணவர்களும்
தமிழ்,
ஆங்கிலம்,
கணக்கு
பாடங்களில் முன்னேற்றம் அடைய
செய்வதற்காக ஆலோசித்தல்.
🌟 ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிக்கின்ற
400 மாணவர்கள் 100% Basic Learning Outcomes (BLO) முடிக்க முயற்சி எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது.
🌟 தாய்மொழி தமிழ் இல்லாத
இந்தி தாய்மொழி
கொண்ட மாணவர்கள் தமிழ் பாடத்தை
சரளமாக படிப்பதற்கான
ஆலோசனை வழங்குதல்.
🌟 மாணவர்கள், தினமும் வீட்டில்
இரவு ஒரு மணி நேரம் மற்றும்
காலை ஒரு மணி நேரம்
சத்தமாக படிக்க ஆலோசனை கூறுதல்.
🌟 பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் நிற்காமல் பார்த்துக்கொள்வது,
இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் நலன் சார்ந்த கருத்துக்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
கீழ்க்கண்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
1. திருமதி. லட்சுமி பிரியா.
2. திருமதி பத்மஜா.
3. திருமதி. பானு.
4. திரு. சரவணன்.
5. திரு. பெரியசாமி.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட
பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்கள்
1.திரு. விஜய்.
துணைத் தலைவர்
2. திரு. சரவணன் .
பெற்றோர் உறுப்பினர்
3. திரு. ரவி.
பெற்றோர் உறுப்பினர்
4. திருமதி. வெங்கட் அம்மா.
பெற்றோர் உறுப்பினர்
5. திருமதி. ராஜேஸ்வரி.
பெற்றோர் உறுப்பினர்
6. திருமதி. ரேவதி.
பெற்றோர் உறுப்பினர்
4. திருமதி. சுகன்யா
கல்வியாளர்.
நன்றியுரை
திருமதி. சுகன்யா.
SMC கல்வியாளர்.
கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் SMC உறுப்பினர்களுக்கும்
நன்றி பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
--------------------------------------.