கிருஷ்ணகிரி மாவட்டம்
வனம் நிறைந்த மாவட்டமாக
உருவாக்கப்படும்
- மாவட்ட ஆட்சித்தலைவர்
தொரப்பள்ளி கிராமம்,
பில்லனக்குப்பம் ஊராட்சியில்
டைட்டான் நிறுவனம் சார்பாக
45 ஏக்கரில் 2.05 லட்சம்
மரக்கன்றுகள்
நடும் பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் -
மாவட்ட முதன்மை நீதிபதி
தொடங்கி வைத்தனர்
ஓசூர். ஏப்ரல். 23. –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் டைட்டான் நிறுவனம் சார்பாக, சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், 33 ஏக்கர் மற்றும் பில்லனக்குப்பம் ஊராட்சியில் 12 ஏக்கர் என மொத்தம் 45 ஏக்கர் பரப்பளவில் 2,05,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி வி.ஆர்.லதா ஆகியோர் இன்று (23.04.2025) துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு வனங்களை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
டைட்டான் வனம் திட்டம்
சமூக பொறுப்பு
நிதியுதவியுடன்
அரசு புறம்போக்கு நிலங்களை குறுங்காடுகளாக
மாற்றும் திட்டத்தின்
ஒரு பகுதியாக
டைட்டன் நிறுவனம்
பயோட்டாசோயில்
ஃபவுண்டேஷன்
இணைந்து அறிவியல் முறையில் ஆய்வு செய்து, டைட்டான் வனம் திட்டம் மூலம் முதல் கட்டமாக டைட்டன் நிறுவனத்தில் 33 ஏக்கர் பரப்பளவிலும்,
மியாவாக்கி
பில்லனக்குப்பம் ஊராட்சியில்
12 ஏக்கர் என மொத்தம் 45 ஏக்கர் நிலப்பரப்பில் மியாவாக்கி
முறையில் 2 இலட்சத்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மியாவாக்கி காடு
வளர்ப்பு முறை
என்பது ஜப்பான் நாட்டில்
பயன்படுத்தும் முறையாகும்.
இம்முறையில் இடைவெளி இல்லா அடர்காடு என்ற தத்துவப்படி, ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறையாகும்.
உலகம் முழுவதும் மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது.
தற்போது தமிழகத்திலும்
மியாவாக்கி முறை
பிரபலமாகி வருகிறது.
இந்த முறையை பயன்படுத்தி வந்தால் இரண்டு வருடத்தில் தரையே தெரியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் மரங்களாக இருக்கும்.
அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளின் இனங்களான
நீர்மருது,
கருமருது,
ஈட்டி,
சிவலிங்கம் மரம்,
பச்சைலிங்க மரம்,
ஏழிழை மரம்,
போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய மறைக்கப்பட்ட மரங்களையும் இங்கு நடவு செய்து, சிறுவனமாக உருவாக்கப்படும்.
இதனால் நுண்காலநிலை மாற்றம் உருவாகும். மேலும், சோலார் பவர் ஆழ்துளைக் கிணறு மற்றும் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு அதை ஒரு செயலி மூலம் கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட உள்ளது.
அதற்காக பொதுமக்கள் மரங்களை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதனைத்தொடர்ந்து,
இரண்டாம் கட்டமாக
டெல்டா எலக்ட்ரானிக்ஸ்
நிறுவனத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், அழிவின் விளிம்பில் உள்ள இனங்களை உற்பத்தி செய்ய தனியாக நர்சரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஓசூர் பகுதியில்
ஒரு குவாரியை எடுத்து,
புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் மரக்கன்றுகள் நடவு
செய்யப்பட உள்ளது.
மேலும் பல்வேறு நிறுவனங்கள் மரக்கன்றுகள் நடவு செய்ய முன் வந்துள்ளனர்.
மியாவாக்கி முறையில்
மரக்கன்றுகளை நடவு செய்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தை வனம் நிறைந்த மாவட்டமாக
உருவாக்கப்படும்
என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
25,000 மரக்கன்றுகள்
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சி,
பந்தரகுட்டை கிராமத்தில்,
ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்துறை,
எஸ்எஸ்எப் பிளாஸ்டிக்
இந்தியா லிமிடெட்
இணைந்து மியாவாக்கி காடு வளர்ப்பு முறையில்
25,000 மரக்கன்றுகள்
நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.பிரியங்கா இ.ஆ.ப.,
டைட்டான் நிறுவன மேலாண்மை இயக்குநர்
திரு.பி.கே.வெங்கட்ட ரமணன்,
உதவி வன பாதுகாவலர்
திரு.அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ் இ.வ.ப.,
சமூக பொறுப்பு நிதி
செயல் அலுவலர்
திரு.ஸ்ரீதர்,
மண்டல மேலாளர்
திரு.ஸ்ரீகாந்த்,
முதுநிலை மேலாளர்
திரு.வினோத்,
வேளாண்மைத்துறை
இணை இயக்குநர்
திரு.பச்சையப்பன்,
தோட்டக்கலைத்துறை
துணை இயக்குநர்
திருமதி.குணவதி,
உதவி இயக்குநர்
திருமதி.சிவசங்கரி,
எஸ்எஸ்எப் பிளாஸ்டிக் இந்தியா லிமிடெட் இயக்குநர்
திரு.பாஸ்கர்,
பயோட்டாசோயில் ஃபவுண்டேஷன் நிறுவனர்
திரு.செந்தில்குமார்,
வட்டாட்சியர்
திருமதி.வளர்மதி,
தனி வட்டாட்சியர்
திரு.பாலாஜி,
சூளகிரி உதவி பொறியாளர்
திரு.கோவிந்தராஜ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.ராஜேஷ்,
திரு.முருகன்,
திருமதி.விஜயா,
திருமதி.சாந்தலட்சுமி,
துறை சார்ந்த அலுவலர்கள்
மற்றும்
தொரப்பள்ளி கிராமத்தில் மியாவாக்கி காடுகள் அமைய உறுதுணைய சேவையாற்றி வரும்
இயற்கை ஆர்வலர்கள்
திரு.லட்சுமணன்,
திரு.தாமஸ்,
எச்ஐஏ திரு.அரவிந்த் ஆதி,
சமூக ஆர்வலர் திரு.சத்தியமூர்த்தி
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.