டி.என்.பி.எஸ்.சி.
தேர்வு - II
முதன்மை எழுத்துத் தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II
(குரூப் II / IIA சேவைகள்)
முதன்மை எழுத்துத் தேர்வு
08.02. 2026 அன்று
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 06. –
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு-II
(குரூப் II / IIA சேவைகள்)
முதன்மை எழுத்துத் தேர்வு
08.02.2026 அன்று
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு -II
(குரூப் II / IIA சேவைகள்)
முதன்மை எழுத்துத் தேர்வு
08.02.2026 அன்று
முற்பகல்
(காலை 9.30 மணி முதல்
மதியம் 12.30 மணி வரை)
(OMR முறை) மற்றும்
பிற்பகல்
(மாலை 2.30 மணி முதல்
5.30 மணி வரை (Descriptiveமுறை)
இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில்
(காந்திரோடு, அப்சரா தியேட்டர் எதிரில், கிருஷ்ணகிரி)
இருவேளைகளிலும் நடைபெறும்.
இத்தேர்வில்
OMR முறையில் 113
மற்றும்
Descriptive முறையில் 116
தேர்வர்களும்
தேர்வு எழுத உள்ளார்கள்.
தேர்வர்களுக்கு தேர்வுக்கூடங்களில்
அடிப்படை வசதிகள்,
தடையில்லா மின்சாரம்
வழங்கவும் மற்றும்
சிறப்பு பேருந்து வசதிகள்
சம்பந்தப்பட்ட துறைகள் மூலம்
ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்களின்
அனுமதி சீட்டில்
(Hall Ticket)
குறிப்பிட்டுள்ளவாறு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள
தேர்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்திற்குள்
தேர்வுக்கூடங்களுக்கு வரவேண்டும்.
தாமதமாக வருபவர்களை தேர்வுக் கூடத்திற்குள்
அனுமதிக்கப்பட இயலாது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணைய உத்தரவுகளை
தேர்வர்கள் கட்டாயமாக
பின்பற்ற வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------.