துளசி ஆதரவற்றோர் முதியோர்
இல்லம் திறப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி,
மஹாலட்சுமி நகரில்,
சமூகநலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை சார்பாக,
துளசி தொண்டு நிறுவனத்தின்
துளசி ஆதரவற்றோர் முதியோர்
இல்லம் திறப்பு விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஒசூர். பிப். 6. -
சமூகநலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை
துளசி தொண்டு நிறுவனத்தின்
துளசி ஆதரவற்றோர்
முதியோர் இல்லம்
ஓசூர் மாநகராட்சி,
மஹாலட்சுமி நகரில்,
சமூகநலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை சார்பாக,
துளசி தொண்டு நிறுவனத்தின்
துளசி ஆதரவற்றோர்
முதியோர் இல்லத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (06.02.2026) திறந்து வைத்து,
குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
இலவச முதியோர் இல்லம்
ஓசூர் மாநகராட்சி பகுதியில்
சமூகநலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறை மூலமாக
இலவச முதியோர் இல்லம்
இன்று துவங்கப்பட்டது.
இந்த முதியோர் இல்லம் நடத்துவதற்கான
குடியிருப்பு வீட்டினை
திரு.வெங்கடேஷ் பாபு
என்பவரால் சமூக நலத்துறைக்கு
5 வருடங்களுக்கு இலவசமாக
வழங்கப்பட்டதை தொடர்ந்து
துளசி தொண்டு நிறுவனத்தின்
மூலமாக இலவச முதியோர் இல்லம்
நடத்தப்பட உள்ளது.
மீரா பல்நோக்கு மருத்துவமனை
இலவச பொது மருத்துவ
பரிசோதனை முகாம்
இந்நிகழ்வின் போது
மூத்த குடிமக்களுக்கான
மாநில செயல்திட்டத்தின்படி (2025 2026)
45 முதியோர்களுக்கு
Eye Research Centre
Foundation
மூலமாக கண்புரை அறுவை சிகிச்சை
மேற்கொள்வதற்கான
பரிசோதனை முகாம் மற்றும்
மீரா மருத்துவமனை மூலமாக
முதியோர்களுக்கான
இலவச பொது மருத்துவ
பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில்
சுமார் 50 முதியோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
துளசி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்
திருமதி.வாசுகி கருணாகரன்,
முதியோர் இல்லம் நடத்துவதற்கான
குடியிருப்பு வீட்டினை வழங்கிய
திரு.வெங்கடேஷ் பாபு
ஆகியோர்களை பாராட்டி,
பொன்னாடை அணிவித்து
கேடயங்கள் வழங்கினார்.
லயன் டேட்ஸ் சிரப்
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
ஓசூர் மாநகராட்சி,
ஆர்.வி.அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில்,
லயன் டேட்ஸ் நிறுவனத்தின் சார்பாக,
CSR நிதியின் மூலம்
29,720 மாணவ, மாணவிகளுக்கு
ரூ.65 லட்சம் மதிப்பிலான
லயன் டேட்ஸ் சிரப் வழங்கும்
பணிகளை துவக்கி வைத்தார்.
ஓசூர் மாநகராட்சி பகுதியில் இயங்கும்
158 அரசு பள்ளிகளில் பயிலும்
சுமார் 29,720 மாணவ, மாணவிகளுக்கு
CSR நிதியின் முலம் லயன் டேட்ஸ்
நிறுவனத்தின் சார்பாக,
ஊட்டச்சத்து மிக்க லயன் டேட்ஸ் சிரப்
தலா ஒரு கிலோ வீதம்
சுமார் ரூ.65 லட்சம் மதிப்புடைய
லயன் டேட்ஸ் சிரப் இலவசமாக
வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
மாவட்ட சமூகநல அலுவலர்
திருமதி.சக்தி சுபாசினி,
மாவட்ட கல்வி அலுவலர்
திருமதி.ரமாவதி,
லயன் டேட்ஸ் நிறுவன மேலாளர்
திரு.முத்துராஜ்,
வட்டாட்சியர்
திரு.குண சிவா,
ஒசூர்முன்னாள் எம்எல்ஏ
திரு. K.A.மனோகரன்
பள்ளி தலைமையாசிரியர்
திருமதி.வளர்மதி,
மண்டல குழு தலைவர்
திரு.ரவி,
குடியிருப்பு வீட்டின் உரிமையாளர்
திரு.S.வெங்கடேஷ் பாபு,
துளசி தொண்டு நிறுவன நிறுவனர்
திருமதி.வாசுகி கருணாகரன்,
மீரா பல்நோக்கு மருத்துவமனை
திருமதி. மரு.அம்பிகா பாரி
மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
------------------------------------.