சர்வதேச மோல் நாள்
1980களில்
த சயன்சு டீச்சர்
என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில்
முதல் தடவையாக மோல் நாள்
பற்றிய கருத்து வெளியிடப்பட்டது.
இக்கட்டுரையினால் ஈர்க்கப்பட்ட
மோரிசு ஓலெர்
என்ற விஸ்கொன்சின் மாநில
வேதியியல் ஆசிரியர்
1991 மே 15 ஆம் நாள்
தேசிய மோல் நாள் நிறுவனத்தை
(National Mole Day Foundation NMDF)
ஆரம்பித்தார்.
அக்டோபர் 23 –
சர்வதேச மோல் நாள் (Mole Day)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். அக். 23. –
மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும்.
இந்நாளை அவர்கள்
அமெரிக்க முறையில் 6:02 10/23
எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது.
அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.
1980களில்...
த சயன்சு டீச்சர்
என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் முதல் தடவையாக மோல் நாள் பற்றிய கருத்து வெளியிடப்பட்டது.
இக்கட்டுரையினால் ஈர்க்கப்பட்ட
மோரிசு ஓலெர்
என்ற விஸ்கொன்சின் மாநில வேதியியல் ஆசிரியர்
1991 மே 15 ஆம் நாள்
தேசிய மோல் நாள் நிறுவனத்தை
(National Mole Day Foundation NMDF)
ஆரம்பித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாடு,
தென்னாப்பிரிக்கா,
ஆஸ்திரேலியா,
கனடா
ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் வேதியியல் அல்லது மோல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்நாளில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
மோல் வாரம்
பல பாடசாலைகள் இக்காலப்பகுதியை மோல் வாரமாகவும் கொண்டாடுகின்றன.
அமெரிக்க வேதியியல் குழுவும் தேசிய வேதியியல் வாரமாகக் கொண்டாடுகின்றது.
Avogadro எண் ஒரு பொருள் ஒரு மோல் உள்ள துகள்கள் எண்ணிக்கை.
மோல் டே என்பது அவோகாடோவின் எண்ணுடன் தொடர்புடைய தேதி ஒன்றில் கொண்டாடப்படாத அதிகாரப்பூர்வ வேதியியல் விடுமுறையாகும்,
இது சுமார் 6.02 x 1023 ஆகும் . மோல் தினத்தின் நோக்கம் வேதியியல் ஆர்வத்தை ஊக்குவிப்பதாகும்.
------------------------------------------.