கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
பகுத்தறிவு பகலவன்
தந்தை பெரியார்
147- வது பிறந்தநாள் விழா
எம்எல்ஏ. Y. பிரகாஷ்,
மேயர் S. A. சத்யா,
பங்கேற்பு
ஒசூர். செப். 17. –
தந்தை பெரியாரின்
147 வது பிறந்தநாள் விழா
ஓசூர் மாநகராட்சியில்
திமுக தலைவர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆணைக்கிணங்க
பகுத்தறிவு பகலவன்
தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா
நடைப்பெற்றது.
தந்தை பெரியரின் 147 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
ஒசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சமத்துவபுரம் பெரியார் சிலை
நல்லூர் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும்
கிருஷ்ணகிரிமேற்கு மாவட்ட செயலாளர்,
எம்எல்ஏ. Y. பிரகாஷ்
மாநகர செயலாளர்
மேயர் S. A. சத்யா
ஆகியோர் தலைமை வகித்து மலர் தூவி மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
உறுதி மொழி ஏற்பு
அப்போது சமத்துவநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கினர்.
இந்த விழாவில்
துணை மேயர் ஆனந்தய்யா,
மாவட்ட பொருளாளர் சுகுமாரன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கண்ணன்,
மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கலைசெழியன், ஒன்றிய துணை செயலாளர் வீரபத்திரப்பா,
ஒன்றிய ஓட்டுநர் அணி அமைப்பாளர் சீனிவாஸ், பேகேப்பள்ளி மஞ்சுநாத்,
சுப்பிரமணி ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.