பரிணாம கோட்பாட்டின் தந்தை
'சார்லஸ் ராபர்ட் டார்வின்'
பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி ஒன்றியம் கக்கதாசம்,
அரசு உண்டு உறைவிட
நடுநிலைப்பள்ளியில்
ஓசூர் "நீரோ சாரிடபுள் டிரஸ்ட்"
(NERO Charitable Trust) சார்பாக
அறிவியலாளர்,
பரிணாம கோட்பாட்டின் தந்தை
'சார்லஸ் ராபர்ட் டார்வின்'
அவர்களின் பிறந்தநாள் விழா
டார்வின் முகமூடி அணிந்து
பங்கேற்ற மாணவ,மாணவிகள்
ஒசூர். பிப். 12. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி ஒன்றியத்தில் உள்ள கக்கதாசம்
அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில்
பிப்ரவரி 12-ம் தேதி வியாழக்கிழமை அன்று
அறிவியலாளர்,
பரிணாம கோட்பாட்டின் தந்தை
'சார்லஸ் ராபர்ட் டார்வின்'
அவர்களின் பிறந்தநாள் விழா
சிறப்பான முறையில்
கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூரில் இயங்கிவரும்
'நீரோ சாரிடபுள் டிரஸ்ட்'
(NERO Charitable Trust)
சார்பாக,
கல்வி,
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,
ஏழைகளுக்கு உதவி,
சுகாதாரம்,
சுற்றுச்சூழல் மற்றும்
சமூக நலன் சார்ந்த பணிகளைச்
செய்து வரும் தொண்டு நிறுவனம் ஆகும்.
இந்த தொண்டு நிறுவனத்தின்
விழிப்புணர்வு நிகழ்ச்சியின்
ஒருபகுதியாக,
அரசுப் பள்ளி மாணவர்களிடையே
அறிவியல் மனப்பான்மையை
வளர்க்கும் நோக்கில்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி ஒன்றியத்தில் உள்ள,
கக்கதாசம், அரசு உண்டு உறைவிடப் நடுநிலைப்பள்ளியில்
பிப்ரவரி 12-ம் தேதியன்று
அறிவியலாளர்,
பரிணாம கோட்பாட்டின் தந்தை
'சார்லஸ் ராபர்ட் டார்வின்'
அவர்களின் பிறந்தநாள் விழா
சிறப்பான முறையில்
கொண்டாடப்பட்டது.
பரிணாம கோட்பாட்டின் தந்தை
சார்லஸ் டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு
காணொலி காட்சிகள் மூலம்
சார்லஸ் டார்வின் அவர்களின்
வாழ்க்கை வரலாறு,
பரிணாமக் கோட்பாடு
ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக
சார்லஸ் டார்வின் அவர்களின்
'முகமூடி' அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
கூடுதலாக
டார்வின் வாழ்கை
வரலாறு புத்தகம்
வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
6,7,8 - ஆம் வகுப்பு பயிலும் 100க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள்,
டார்வின் முகமூடி அணிந்து
கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை
'நீரோ சாரிடபுள் டிரஸ்ட்'
(NERO Charitable Trust)
நிறுவனர் வி.ஐஸ்வர்யா
அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
---------------------------------.