உடல் தானம் - கண் தானம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
மறைந்த தாயின் விருப்பப்படி அவரது-
கண்களை தானமாக
நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கும்
உடலை தானமாக
கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் -
வழங்கிய பிள்ளைகள்.
கண் தானம் மற்றும் உடல் தானம் –
செய்து மற்றவர்களுக்கு
முன்மாதிரியாக …
மறைந்தும் வாழும் தெய்வமாக திகழ்கிறார்
திருமதி. சுதந்திரா அம்மையார்.
ஓசூர். அக். 18. –
உடல் தானம் - கண் தானம்
ஒசூர் கேசிசி நகரைச் சேர்ந்தவர்
திரு. ராஜகோபாலன். இவரது துணைவியார்
திருமதி. சுதந்திரா,
இவர் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த
ஆகஸ்ட் 15-ம் தேதி 1947- ம் ஆண்டு பிறந்தவர்.
இவர் சிலகாலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு
2025 - அக்டோபர் 16-ம் தேதி அன்று சிவபதவி
அடைந்தார்.
தங்கள் தாயின் விருப்பபடி, அவரின் பிள்ளைகள்
திரு. R.சங்கர்,
திரு.R.பாஸ்கர்,
திருமதி. R.கீதா ராஜேந்திரன்,
திரு.R. கோபி
ஆகிய நால்வரும், தங்கள் தாயின் உடலை தானமாக செய்ய முன்வந்தனர்.
அதன்படி
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்
அவர்களின் ஒத்துழைப்புடன் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்வதற்கான
பணிகள் மேற்கொள்ளப்பட்டு...
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் தாயின் உடலை தானமாக ஒப்படைத்தனர்.
மேலும் இறந்த சில மணி நேரத்தில்
கண் தானமும்
நாராயணா நேத்ராலயா
மூலம் செய்யப்பட்டது.
பல மருத்துவ மாணவர்களின் கல்வி பயிற்சிக்காக, பயனளிக்கும் வகையில் உடல் தானம் செய்ய ஒத்துழைத்த கொடை வள்ளல்களை பாராட்டுவோம்.
மறைந்தும் வாழும் தெய்வம்
கண் தானம் மற்றும் உடல் தானம் –
செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தி
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக
மறைந்தும் வாழும் தெய்வமாக திகழ்கிறார்
திருமதி. சுதந்திரா அம்மையார்.
குறிப்பு: 1.
மூளைச் சாவு ஏற்பட்டு மற்ற உறுப்புகள் நன்றாக இருக்கும் பொழுது மட்டுமே உறுப்பு தானம் செய்ய முடியும்.
மற்றபடி இயற்கை மரணம் எய்திய பிறகு,
கண்களை மட்டும் உறுப்பு தானமாகவும்,
மருத்துவர்கள் பயிற்சிக்காக உடல் தானம் செய்ய முடியும்.
உறுப்பு தானம் வேறு,
உடல் தானம் வேறு
இதை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபடுவோம்.
குறிப்பு -2.
கண் தானம் மற்றும் உடல் தானம்
செய்ய விருப்பமுள்ளவர்கள்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
கைபேசி எண் - 98409 48449.
------------------------------------.