விண்ணில் கால்தடம் பதித்த
முதல் இந்தியர்
ராகேஷ் ஷர்மா
ஜனவரி – 13 –
விண்வெளியில் பறந்த முதல்
இந்தியரான ராகேஷ் ஷர்மாவின்
76-வது பிறந்த நாள்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 13. –
ராகேஷ் ஷர்மா இந்தியாவின்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி பிறந்தார்.
1966-ல்
தேசிய ராணுவப் பள்ளியில்
விமானப் படைப் பிரிவு மாணவர்
பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப்படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார் அதன் பின்னர் 1966 இல் அவர் தேசிய ராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து படிப்பை முடித்தார்
இவர் 1970 இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார் 1984 ஆம் ஆண்டில் விமானப்படைப் பிரிவின் ஒரு குழுவிற்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1982-ல்
விண்வெளி வீரராக தேர்வு
கடந்த 1982-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 20-ம் தேதி ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், விண்ணிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. இதற்காக சோயூஸ் விண்கலம் தயாரானது. இதில் அந்நாட்டைச்சேர்ந்த இரு விண்வெளி வீரர்களில் மூன்றாவது வீரராக இந்தியாவின் ராகேஷ் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டார்.
1984-ல்
விண்ணில் பறந்தார் ஷர்மா.
ரஷ்யாவின் கஜகஸ்தான் மாகாணத்தின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து சோயூஸ்-டி.11 விண்கலம் கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி விண்ணில் புறப்படத்தயாரானது. மொத்தம் 7 டன் எடைகொண்ட இந்த விண்கலத்தில், விண்வெளி விஞ்ஞானிகள் கையசைத்து வழியனுப்பி வைக்க விண்ணில் பறந்தார் ஷர்மா.
விண்ணில் கால்தடம் பதித்த
முதல் இந்தியர்
மொத்தம் 7 நாட்கள், 21 மணிநேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தார். இதன் மூலம் விண்ணில் கால்தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார். விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார்.
ஷர்மாவுக்கு
அப்போதைய பிரதமர் இந்திரா பாராட்டினார்.
ரஷ்யாவின் உயரிய விருது, இந்தியாவில் அசோகசக்ரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.), தேசிய விமான பயிற்சி மையம் (என்.எப்.டி.சி) உள்ள மையங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஷர்மா கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றாலும், இந்திய விண்வெளித்துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளர்ப்பரியது.
------------------------------------------