ஓசூர் பேடரப்பள்ளி
ஊராட்சி ஒன்றிய
அரசு நடுநிலைப்பள்ளியில்
76-வது ஆண்டு
குடியரசு தினவிழா
கொண்டாட்டம்
ஓசூர். ஜனவரி. 26. –
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
76-வது ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேடரப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேடரப்பள்ளி, 3-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில் நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.
இங்கு 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நடுநிலைப்பள்ளியில்
2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி
76-வது ஆண்டு குடியரசு தினவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில்
மகாத்மா காந்தி
உருவப்படம் ரோஜா மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில்
3-வது வார்டு கவுன்சிலர்
ரஜினிகாந்த்
தலைமை வகித்து,
குத்து விளக்கேற்றி
குடியரசு தினவிழாவை
தொடங்கி வைத்தார்.
பிடிஏ தலைவர்
லக்கப்பா
குத்துவிளக்கேற்றினார்.
தேசிய கொடி
அதைத் தொடர்ந்து கவுன்சிலர் ரஜினிகாந்த்
தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி,
சிறப்புரையாற்றினார்.
மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசு
குடியரசு தினவிழாவில் பேச்சுப் போட்டி
விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பேச்சுப்போட்டி
தலைப்பு - குடியரசு தினவிழா
இதில் 6-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை 10 பிரிவுகளில்
மாணவர்கள் பங்கேற்று பேசினார்கள்.
இதில் முதலிடம் பிடித்த 10 மாணவர்களுக்கு முதல் பரிசும்
மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகள்
இதில் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 21 பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஒரு பிரிவுக்கு 2 போட்டிகள் நடத்தப்பட்டு, 1 பிரிவுக்கு 4 பரிசுகள் என
முதல் பரிசு
42 மாணவர்களுக்கும்,
இரண்டாவது பரிசு
42 மாணவர்களுக்கும்,
என மொத்தம் 84 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை
கவுன்சிலர் ரஜினி காந்த்
மற்றும்
பிடிஏ தலைவர் லக்கப்பா
ஆகியோர் வழங்கினார்கள்
இந்த விழாவில்
பள்ளி மேலாண்மை குழு
தலைவி விஜி,
துணை தலைவர் விஜய்,
கல்வியாளர் சுகன்யா,
பிடிஏ செயலாளர் ரமேஷ்
பிடிஏ குழுவினர்,
எஸ்.எம்.சி. குழுவினர்,
ஐ.டி.கே. குழுவினர்,
முன்னாள் மாணவர் குழுவினர்,
மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தினவிழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர்
பொன் நாகேஷ்
சிறப்பாக செய்திருந்தார்.
படம் விளக்கம் -
ஓசூர் மாநகராட்சி 3-வது வார்டு
கவுன்சிலர் ரஜினிகாந்த்,
தலைமையாசிரியர்
பொன்நாகேஷ்
மற்றும் பலர் உள்ளனர்.