தளி ஒன்றியத்துக்குட்பட்ட
குமாரனப்பள்ளி கிராமத்தில்
ரூ.35 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டி,
பால் கொள்முதல் கூட்டுறவு சங்க
கட்டிடம் திறப்பு
தளி ஒன்றிய குழு தலைவர்
சீனிவாசலுரெட்டி பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 03. –
குமாரனப்பள்ளி கிராமத்தில்
ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி
மற்றும் பால் கொள்முதல் கூட்டுறவு சங்க
கட்டிடம் ஆகியவற்றை தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம்,
குமாரனப்பள்ளி கிராமத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க
ரூ.20 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும்,
ரூ.15 லட்சம் மதிப்பில்
பால் கொள்முதல் கூட்டுறவு சங்க கட்டிடமும்
கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.35 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி தலைமை வகித்து குடிநீர்
மேல்நிலைத் தொட்டி மற்றும் பால் கொள்முதல்
கட்டிடம் ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு
தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வுகளில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சந்திரப்பா, ஒன்றிய குழு
கவுன்சிலர் நாராயணசாமி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நாராயணரெட்டி,
பேளகொண்டப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர்
எல்லப்பா, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்
சிவசங்கர் மற்றும் ஊராட்சிமன்ற
துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,
கிராம மக்கள் கலந்து கொண்டனர்.