கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
பாரதியார் நகர் 9-வது வார்டில்
ரூ.12லட்சம் மதிப்பில்
புதிய அங்கன்வாடி கட்டிடம்
திறப்பு விழா
ஓசூர் மேயர் S.A. சத்யா
திறந்து வைத்தார்.
ஓசூர். மார்ச். 27. –
மேயர் S.A.சத்யா
ஓசூர் பாரதியார் நகரில்
கூட்டாண்மை சமூக பொறுப்பு
நிதியின் (CSR) கீழ்
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில்
புதியதாக கட்டப்பட்டுள்ள
அங்கன்வாடி
கட்டிடத்தை
மேயர் S.A.சத்யா
திறந்து வைத்தார்.
புதிய அங்கன்வாடி கட்டிடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு
பாரதியார் நகரில் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின்(CSR) கீழ் ரூ. 12லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓசூர் மேயர் S.A. சத்யா தலைமை வகித்து. புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
மேலும் பாரதியார் நகரில்
கூட்டாண்மை சமூக பொறுப்பு
நிதியின் (CSR) கீழ் ரூ. 5 லட்சம்
மதிப்பீட்டில் புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
துணை மேயர் ஆனந்தய்யா,
ஓசூர் ஒன்றிய செயலாளர்
கஜேந்திர மூர்த்தி,
மண்டல குழு தலைவர் R. ரவி,
மாமன்ற உறுப்பினர் நா.கிருஷ்ணப்பா இளநிலை பொறியாளர் செந்தில்குமார்
மற்றும் பலர் உடன் இருந்தனர்.
------------------------------------.