ஓசூர் நல்லூர் பிருந்தாவனா பள்ளியில்
மாநில அளவில்
தடகளப் போட்டிகளில்
5 தங்கம், 4வெள்ளிப்பதக்கங்கள்
வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
அகில இந்திய தடகள பயிற்சியாளர் பங்கேற்பு
ஓசூர். நவ. 25. –
by Jothi Ravisugumar
பிருந்தாவனா பள்ளி
ஓசூர் ஒன்றியம் நல்லூர் பிருந்தாவனா சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநில அளவில் தடகளப் போட்டிகளில் 5 தங்கம், 4 வெள்ளிப்பதக்கங்கள் வென்ற பிருந்தாவனா பள்ளி மாணவர்களை இந்திய அத்லெட்டிக் பயிற்சியாளர் அஜய்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
சேர்மன் டாக்டர் சேகர்
நிறுவனர் புஷ்பலதா சேகர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் கக்கனூர், நல்லூர் அருகே இயங்கி வரும் பிருந்தாவனா சிபிஎஸ்சி பள்ளியை சேர்மன் டாக்டர் சேகர், பள்ளி நிறுவனர் புஷ்பலதா சேகர் ஆகியோர் நிர்வகித்து வருகிறார்.
5 இடங்களில் இயங்கும் பள்ளி
இவர்களின் தலைமையின் கீழ் பிருந்தாவனா பள்ளி தமிழ்நாட்டில் நல்லூர், பெத்த பேளகொண்டப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும், கர்நாடகாவில் ஆனேக்கல் அடுத்துள்ள ஜிகனி, அர்ப்பனஹள்ளி, இண்டல்வாடி ஆகிய 3 இடங்களிலும் என மொத்தம் 5 இடங்களில் பிருந்தாவனா சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது.
10கி.மீ., 6 கி.மீ. மாரத்தான் போட்டி
இந்த 5 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 10 கி.மீ. மற்றும் 6 கி.மீ. ஆகிய இரு பிரிவுகளில் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டி 9 இடங்களில் தொடங்கி இறுதியில் நல்லூர் பிருந்தாவனா பள்ளியில் முடிவுற்றது. இந்த மாரத்தான் போட்டில் 1200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 9 வழித்தடங்களில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியின் போது மாணவர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு வழித்தடத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
5 தங்கம், 4 வெள்ளிப்பதக்கங்கள்
கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நவம்பர் 22 – 23-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாநில அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றது. இதில் கர்நாடகா ஆனேக்கல் அடுத்துள்ள ஜிகனியில் இயங்கி வரும் பிருந்தாவனா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு,. 5 தங்கப்பதக்கங்களும், 4 வெள்ளிப்பதக்கங்களும் வென்றனர்.
மாணவர் பிரிதம் எஸ். ஜலவாதி
100மீ ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை
ஜிகனி பிருந்தாவனா பள்ளி மாணவர் பிரிதம் எஸ். ஜலவாதி தடகளப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இவர், 100 மீ. தூரத்தை 11.6 செகண்ட்களில்
(புதிய சாதனை) ஓடி
முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும்,
200மீ. தூரத்தை 24.4 செகண்ட்களில் ஓடி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் 400 மீ ரிலே போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் என மொத்தம் 3 தங்கப்பதக்கங்களை வென்றார். மேலும் மாணவர் பிரிவில் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.
தேசிய போட்டிக்கு 6 மாணவர்கள் தகுதி
பிருந்தாவனா பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள் தேசிய அளவிலான தடகளப்போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
நல்லூரில் பாராட்டு விழா
மாரத்தான் போட்டி மற்றும் மாநில அளவிலான தடகளப்போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நல்லூர் பிருந்தாவனா பள்ளியில் நடைபெற்றது.
நிறுவனர்
புஷ்பலதா சேகர்
இதில் பிருந்தாவனா பள்ளி சேர்மன் டாக்டர் சேகர், பள்ளி நிறுவனர் புஷ்பலதா சேகர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் சந்திரிகா, பிருந்தாவனா பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார்.
அகில இந்திய தடகள
பயிற்சியாளர் அஜய்குமார்
சிறப்பு விருந்தினராக அகில இந்திய அத்லெட்டிக் பயிற்சியாளர் அஜய்குமார் பங்கேற்று, மாநில அளவில் 5 தங்கம் மற்றும் 4 வெள்ளிப்பதக்கங்கள் வென்ற மாணவர்களையும், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது,
பிருந்தாவனா பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மாநில அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய அளவில் வெற்றி பெற வாழ்த்து
அதேபோல தேசிய அளவிலும் வெற்றி பெற்று இந்த பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் மாணவர்கள், விளையாட்டு மட்டுமன்றி நல்ல ஒழுக்கத்துடன் நன்கு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். என்றார். இந்த விழாவில் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராணி, உடற்பயிற்சி ஆசிரியரும், கபாடி பயிற்சியாளருமான லோகேஷ் ரெட்டி, பெங்களுர் இன்ஜினீயர் நாகராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.