கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
மாணவர்களுக்கு
பள்ளி வளாக தூய்மை...
சுற்றுப்புற தூய்மை...
விழிப்புணர்வு முகாம்.
மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி
உறுதி மொழி ஏற்பு
மாநகர சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
பங்கேற்பு
ஓசூர். அக். 14. –
மாணவர்களுக்கு
பள்ளி வளாக தூய்மை
சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு முகாம்
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு
பள்ளி வளாக தூய்மை பணி மற்றும்
சுற்றுப்புற தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின்
தலைமை ஆசிரியர்
டாக்டர். வளர்மதி,
தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
செந்தில்குமார்
அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக
ஓசூர் ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின்
முன்னாள் மாணவர்,
மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
அவர்கள்
கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநகராட்சி நகர் நல அலுவலர்
டாக்டர். அஜீத்தா,
அவர்கள்
கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுற்றுப்புற சூழல் தூய்மை பற்றி எடுத்துரைத்தார்.
உறுதி மொழி ஏற்பு
இந்த விழிப்புணர்வு முகாமில்...
மாணவர்களுக்கு மீண்டும்
மஞ்சப்பை
விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்த உறுதி மொழியில்...
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
தூய்மையை மாணவர்கள் பள்ளியில் இருந்து கடைப்பிடித்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கப் பாடுபட வேண்டும்.
ஓசூர் மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
என்று அறிவுறுத்தப்பட்டது.
அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடன் பள்ளியின் நாட்டு நல திட்ட மாணவர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு
பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.
இந்த முகாமில்...
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்
உதயகுமார்.
ஓசூர் வட்டார சுற்றுப்புற சூழல் ஆய்வாளர்
பாலாஜி,
பள்ளியின் துணை தலைமை ஆசிரியர்.
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர்
சக்திவேல்.
மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள்,
மாணவர்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------.