மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஓசூர் மாநகர குழு மற்றும்
ஒன்றிய குழு இணைந்து நடத்திய
சட்டமேதை அம்பேத்கர்
அவர்களை
அவமதித்து பேசிய
மத்திய அமைச்சர் அமித்ஷாவை
கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓசூர். டிச. 20. –
ஓசூரில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓசூர் மாநகர குழு மற்றும் ஓசூர் ஒன்றிய குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர செயலாளர்
எம்.ஜி. நாகேஷ்பாபு
ஓசூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் எம்.ஜி. நாகேஷ்பாபு தலைமை வகித்தார்.
மாநகர கமிட்டி உறுப்பினர் பி.ஜி.மூர்த்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரும், மாநகர கமிட்டி உறுப்பினருமான பி.ஜி.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாலிங்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் சிறப்புரையாற்றினார்.
இதில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சேதுமாதவன்,
சிஐடியூ மாவட்ட தலைவர் எஸ். வாசுதேவன்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆனந்தகுமார்,
டிஒய்எப்ஐ முன்னாள் மாவட்ட
செயலாளர் எம்.ரவி,
ஓசூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணதேவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி, அசோக்லேலாண்ட் கிளை செயலாளர் ரவி மற்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
மாதர் சங்கம்
ஆகியவற்றின் மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.