இந்திய தனியார்
பள்ளிகள் கூட்டமைப்பு
மாநில விருது - 2024
கர்நாடகா மாநிலத்தில்
சிறந்த பள்ளியாக
பிருந்தாவன பள்ளி
விருது பெற்று சாதனை
விதான பரிஷத் தலைவர்
பசவராஜ் ஹொரட்டி
விருது வழங்கி பாராட்டு
ஓசூர். நவ. 28. –
by Jothi Ravisugumar
கர்நாடகா மாநிலத்தில் இயங்கி வரும் பிருந்தாவன பள்ளி(சிபிஎஸ்சி), இந்திய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்படும், உயரிய விருதான, மாநில அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
ஜிகனி, அர்ப்பனஹள்ளியில்
இரு இடங்களில் இயங்கும்
பிருந்தாவன பள்ளிக்கு விருது
கர்நாடகாவில் ஆனேக்கல் அடுத்துள்ள ஜிகனி, அர்ப்பனஹள்ளி, இண்டல்வாடி ஆகிய 3 இடங்களிலும், தமிழ்நாட்டில் நல்லூர், பெத்த பேளகொண்டப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும், என மொத்தம் 5 இடங்களில் பள்ளி சேர்மன் டாக்டர் சேகர் தலைமையில் பிருந்தாவன சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது.
சிறந்த பள்ளியாக
மாநில விருதுக்கு தேர்வு
இதில் கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் தாலூகாவில் உள்ள ஜிகனி மற்றும் அர்ப்பனஹள்ளி ஆகிய இரண்டு இடங்களில் இயங்கி வரும் பிருந்தாவன பள்ளிக்கு கர்நாடகா மாநில சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.
இந்திய தனியார்
பள்ளி கூட்டமைப்பு
இந்திய தனியார் பள்ளி கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மாநிலங்களில் இயங்கி வரும் சிறந்த தனியார் பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் தாலூகாவில் உள்ள ஜிகனி, அர்ப்பனஹள்ளி ஆகிய இரு இடங்களில் இயங்கி வரும் பிருந்தாவன பள்ளி
தேர்வு பெற்றுள்ளது.
தரமான கல்வி
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குதல், மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை பேணிக்காப்பது, பள்ளியின் சுற்றுச் சூழலை சுகாதாரமான முறையில் பராமரிப்பது, சேவை மனப்பான்மையுடன் பள்ளிக்கூடத்தை நடத்துவது ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கி வரும் பிருந்தாவன பள்ளிக்கு 2024-ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
கர்நாடகா விதான
பரிஷத் தலைவர் பசவராஜ்ஹொரட்டி
கர்நாடகா கேஏஎம்ஸ் மற்றும் சண்டிகர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இந்த மாநில விருது வழங்கும் விழா
பெங்களுரு டவுன் ஹாலில் நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது.
விதான பரிஷத் உறுப்பினர் (எம்எல்சி) புட்டண்ணா,
இதில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் முன்னிலையில் கர்நாடகா விதான பரிஷத் தலைவர் பசவராஜ் ஹொரட்டி விருது வழங்க, பிருந்தாவன பள்ளி சேர்மன் டாக்டர் சேகர் பெற்றுக்கொண்டார்.
அப்போது விதான பரிஷத் உறுப்பினர் (எம்எல்சி) புட்டண்ணா, கேஏஎம்ஸ் பொதுச்செயலாளர் சசிகுனார்.டி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த விழாவில் இந்திய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.