ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,
நீர்வளத்துறை
கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டம்
கடைக்கோடி மலைக்கிராமங்களில்
ரூ.2கோடியே 55லட்சம் மதிப்பில்
வளர்ச்சி திட்ட பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி. ஜன. 20. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
அஞ்செட்டி வட்டம்,
அந்தேவனப்பள்ளி ஊராட்சியில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,
நீர்வளத்துறை
சார்பாக
ரூ.2 கோடியே 55 லட்சம் மதிப்பில்
நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள்
இன்று (20.01.2026) நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
தளி ஊராட்சி ஒன்றியம்,
அந்தேவனப்பள்ளி ஊராட்சியில்,
"உங்க கனவ சொல்லுங்க"
திட்டத்தின் கீழ்,
தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று
உங்க கனவை சொல்லுங்க திட்ட
விண்ணப்ப படிவங்களை பொதுமக்களிடம்
வழங்கும் பணிகளை
நேரில் பார்வையிட்டு,
பொதுமக்களின் தேவை,
கனவு குறித்து கேட்டறிந்தார்.
மேலும்,
பொதுமக்கள்
குடும்ப அட்டை,
மருத்துவ காப்பீட்டு அட்டை
வேண்டுமென தங்களது கருத்துக்களையும், கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து,
அந்தேவனப்பள்ளி ஊராட்சியில்
நலவாழ்வு மையம்,
துணை சுகாதார மையம்
ஆகியவற்றில்
திங்கட்கிழமை அன்று
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும்,
செவ்வாய் கிழமை அன்று
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டம் குறித்தும்,
புதன் கிழமை அன்று
தடுப்பூசி செலுத்துவது குறித்தும்,
வியாழக் கிழமை அன்று
வீடுகள் தோறும் சென்று ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய் மற்றும்
மற்ற இணை நோய்களுக்கான
சிகிச்சை அளிப்பது குறித்தும்,
வெள்ளிக்கிழமை அன்று
கலந்தாய்வு கூட்டம் மற்றும்
கர்ப்பிணி தாய்மார்கள்,
வளரிளம் பெண்கள்,
பாலூட்டும் தாய்மார்கள்,
குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு
வரும் சிகிச்சைகள் குறித்தும்,
சனிக்கிழமை அன்று
வீடுகள் தோறும் நேரடியாக சென்று
வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் பார்வையிடும் பணிகள் குறித்தும்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து,
அந்தேவனப்பள்ளி ஊராட்சியில்,
ஊரக வளர்ச்சித்துறை சார்பாக,
தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ்,
ரூ.5 லட்சம் மதிப்பில்
இணை இருப்பிட கட்டிடம்
(துணை வட்டார வளர்ச்சி
அலுவலர்களுக்கான
அலுவலக கட்டிடம்)
கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு,
செங்கல்,
மணல்,
சிமெண்ட்
மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின்
தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து,
அஞ்செட்டி வட்டம்
அக்கா தங்கை ஏரியை
டைட்டான் நிறுவனம் சார்பாக,
தேசிய வேளாண் நிறுவனம் மூலம்
ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில்
ஏரி தூர்வாருதல், உபரிநீர் வெளியேறும்
வகையில் ஒரு தடுப்பணை
அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு,
நீர் சேமிப்பு,
ஏரியை ஆழப்படுத்துதல்,
கரை விரிவாக்கம் செய்வது குறித்தும்,
நீர்வரத்து கால்வாய்,
நீர் வெளியேற்று கால்வாய்களை
அகலப்படுத்துதல் பணிகள் குறித்தும்,
தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய
பணிகள் குறித்தும்
அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடினார்.
மேலும்,
அரசு விதிமுறைகளுக்குட்பட்டு
விவசாய பயன்பாட்டிற்கு
வண்டல் மண் வழங்குவது குறித்து
விவசாயிகளிடம் ஆலோசனை
மேற்கொண்டார்.
தொடர்ந்து,
தொலைதூர மலை கிராமமான
நாட்றம்பாளையம் ஊராட்சி,
கேரட்டி ஏத்தக்கிணறு,
பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள்
கோரிக்கையான வனப்பகுதியில்
சாலை அமைக்கும் பணிகளை
நேரில் பார்வையிட்டு,
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதேபோல் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததையடுத்து,
தற்பொழுது இந்த மாதம்
63 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டுமனை பட்டா கோரி
22 நபர்கள் மனு அளித்துள்ளனர்.
அம்மனுக்களை பரிசீலனை செய்து
அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுமனை பட்டா பெற்ற நபர்கள்
அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லம்
திட்டத்தின் கீழ் வீடுகள்
கட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
மேலும் இப்பகுதியில்
சாலை வசதி,
குடிநீர் வசதி,
தெருவிளக்கு வசதி
உள்ளிட்ட அடிப்படை வசதிகளும்
ஏற்படுத்தி தரப்படும்.
மேலும்,
தளி ஊராட்சி ஒன்றியத்தில்
கலைஞர் கனவு இல்லம்
திட்டத்தின் கீழ்,
120 வீடுகள் கட்ட ஆணை
வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,
கலைஞர் கனவு இல்லம்
திட்டத்தின் கீழ்
வீடு கட்ட விண்ணப்பிக்கும்
பயனாளிகளுக்கும்
வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்படும்.
மேலும்,
பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க
கோரிக்கை வைத்தமைக்கு,
பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஆலோசனை
மேற்கொண்டு செல்போன் டவர் அமைக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது,
வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்
திரு.மோகனசுந்தரம்,
நீர்வளத்துறை
உதவி செயற்பொறியாளர்
திரு.மோகன்ராஜ்,
வனச்சரகர்
திரு.கோவிந்தன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.விஜயா,
திரு.ராஜேஷ்,
பொறியாளர்கள்
திரு.சுரேஷ்,
திரு.அருண்ராஜ்,
திருமதி.கவுரி
வட்டாட்சியர்
திரு.செந்தில்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------.