அரிமா வரலாற்றில் முதல் முறையாக
மறுமண சுயம்வரம் விழா
அனைத்து சமூகத்திற்கான
வரன்கள் அறிமுக நிகழ்ச்சியில்
600 பேர் பங்கேற்பு
ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்துக்கு
பாராட்டு
ஓசூர். டிச. 29. –
மறுமண சுயம்வரம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் நடந்த
அனைத்து சமூகத்திற்கான மறுமண
சுயம்வரம் துவக்க விழாவின்
வரன்கள் அறிமுக நிகழ்ச்சியில்
10-க்கும் அதிகமான மாவட்டங்களில்
இருந்து 600-க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் உள்ள காமராஜ் காலனி, கேஏபி திருமண மண்டபத்தில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில்
மறுமண சுயம்வரம் துவக்க விழா மற்றும் அனைத்து சமூகத்திற்குமான வரன்கள்
அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மறுமண சுயம்வரம் விழாவை
திருமதி. திரு அரிமா என்.பி. செந்தில் குமார்
அவர்கள்
குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆளுநர்
அரிமா என்.பி. செந்தில்குமார்
தலைமை வகித்து, துவக்க உரையாற்றினார்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்க திட்ட இயக்குநர்
அரிமா ஆறுமுகசாமி
அறிமுக உரையாற்றினார்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா மகேந்திரன் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்
முன்னாள் பன்னாட்டு இயக்குநர்
அரிமா கே.தனபாலன்
பேசியதாவது,
மறுமண சுயம்வரம் நிகழ்ச்சி, ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாகும்.
இதுவரை யாரும் செய்யாத சேவையாகும்.
புதிய புரட்சிகரமான இந்த திட்டத்தை ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தினரால் மட்டுமே
சிந்திக்க முடியும். இது மற்ற சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாக, முதல் துவக்கமாக
உள்ளது.
பாராட்டு
ஆகவே ஓசூர் மேக்னம்
அரிமா சங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக ஓசூர் மேக்னம் அரிமா சங்க
தலைவர் மகேந்திரன் மற்றும்
பொறுப்பாளர்களை பாராட்டுகிறேன்.
எது சமூகத்துக்கு தேவையே, எது சமூகத்துக்கு அவசியமோ அதை சிறப்பாக செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரிமா டாக்டர் ஒய்.வி.எஸ்.ரெட்டி
இந்த நிகழ்வில் ஓசூர் அரிமா சங்க
மூத்த நிர்வாகி
அரிமா டாக்டர் ஒய்.வி.எஸ்.ரெட்டி
கலந்து கொண்டு, ஓசூர் மேக்னம் அரிமா
சங்கத்தின் பணியை பாராட்டினார்.
சந்தோசமாக வாழ
விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்
மாவட்ட அமைச்சரவை செயலாளர்
அரிமா வெங்கடேசன்,
அரிமா திருப்பதிசாமி,
அரிமா திருநாவுக்கரசு,
அரிமா ரமேஷ்பாபு,
உள்ளிட்ட அரிமா அமைச்சரவை பெருமக்கள்
வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
அப்போது வாழ்க்கையில் ஆண் பெண்
இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
அப்போது தான் வீட்டில்
சண்டை, தகராறு இன்றி சந்தோசமாக வாழலாம்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை
கணவன் கோபமாக இருக்கும் போது
மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும்.
மனைவி கோபமாக இருக்கும் போது
கணவன் விட்டுக்கொடுக்க வேண்டும்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
இதை கடைபிடித்தால் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும். மறுமணம் செய்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்கள்.
600 பேர் பங்கேற்பு
இந்த மறுமண சுயம்வரம் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை
நடைபெற்றது.
இந்த மறுமண சுயம்வரம் நிகழ்ச்சியில் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை உட்பட 10-க்கும் அதிகமான மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இணையத்தில் 200 பேர் பதிவு
இதில் பங்கேற்க இணையதளம் வழியாக 200 பேர் பெயர்களை பதிவு செய்திருந்தனர். நேரடியாக 400 பேர் பெயர்களை பதிவு செய்தனர்..
நிகழ்ச்சிக்கு வந்த வரன்களின் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட முழுவிவரம் பதிவு செய்யப்பட்ட பின்பு அனைவருக்கும்
வரன் பதிவு படிவம்,
பேட்ஜ் மற்றும் உணவு கூப்பன்கள் வழங்கப்பட்டு, மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
இலவசம்
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரனுடன் இரண்டு பேர் என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்பட்டனர். மூன்று பேருக்கும் உணவு உட்பட கட்டணமாக ரூ.1,500 வசூலிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி வரன்கள், கட்டணமின்றி
இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
திருமண மண்டப அரங்கில் உள்ள வெண் திரையில்
மறுமணம் செய்ய விருப்பமுள்ளவர்களின் பதிவு எண், பெயர், புகைப்படம், வயது, படிப்பு, வேலை, ஊதியம் மற்றும் ஊர் உள்ளிட்ட தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வரன்களை தேர்வு செய்யும்
முறை நடைபெற்றது.
இந்த மறுமண சுயம்வரம் நிகழ்ச்சி ஏற்பாடு
மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை
ஓசூர் மேக்னம் அரிமா சங்க நிர்வாகிகள்
அரிமா என். கண்ணன்,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா ஆர். ரவிசங்கர்.
செயலாளர்( சேவை திட்டம்)
அரிமா பி. மாதேஷ்குமார்.
பொருளாளர்
அரிமா கே. ஆறுமுகசாமி
திட்ட இயக்குநர்
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த மறுமண சுயம்வரம் விழா மற்றும்
வரன்கள் அறிமுக நிகழ்வில்
அனைத்து அரிமா சங்கங்களின்
மூத்த நிர்வாகிகள் மற்றும்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்,
சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.