கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் ஊராட்சி ஒன்றியம்,
கார்கொண்டப்பள்ளியில்,
தேசிய நெடுஞ்சாலை மற்றும்
இந்தியாவின் மான்டேகார்லோ லிமிடெட்
இணைந்து
கெலமங்கலம் மற்றும் ஓசூர் நிலையங்களுக்கு இடையில்,
ரயில் பாதையின் அடியில்
தள்ளப்பட்ட மிகப்பெரிய
"வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பெட்டி (RCC)” அமைத்து
ஆசிய சாதனை புத்தகம்
(Asia Book of Records) -
இந்திய சாதனை புத்தகத்தில்
(India Book of Records)
இடம் பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கி
பாராட்டி கவுரவித்தார்.
ஓசூர். அக். 29. –
தேசிய நெடுஞ்சாலை -
இந்தியாவின் மான்டேகார்லோ லிமிடெட்
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், கார்கொண்டப்பள்ளியில்,
தேசிய நெடுஞ்சாலை மற்றும் இந்தியாவின் மான்டேகார்லோ லிமிடெட் இணைந்து
கெலமங்கலம் மற்றும் ஓசூர் நிலையங்களுக்கு இடையில்,
ரயில் பாதையின் அடியில் தள்ளப்பட்ட மிகப்பெரிய
"வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பெட்டி (RCC)” அமைத்து ஆசிய சாதனை புத்தகம் (Asia Book of Records) மற்றும்
இந்திய சாதனை புத்தகத்தில் (India Book of Records) இடம் பெற்றதற்கான சான்றிதழ்கள் பெற்றமைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஓசூரில் அக்டோபர் 29-ம் தேதியன்று நடந்த இந்த விழாவில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த
தேசிய நெடுஞ்சாலை மற்றும் இந்தியாவின்
மான்டேகார்லோ லிமிடெட்
நிர்வாகிகளிடம்
ஆசிய மற்றும் இந்திய சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கி
பாராட்டுக்களை தெரிவித்து, கவுரவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம்,
கெலமங்கலம் மற்றும் ஓசூர் நிலையங்களுக்கு இடையில்,
ஜூன் 26, 2025 அன்று தொடங்கி,
சாட்டிலைட் ரிங் ரோடு 8 வழிப்பாதையின்
ஒரு 287 ( KM 150/200-200C, NH948A KM 154+503)
ரயில்வே கீழ் பாலம் கட்டப்பட்டது.
ஆறு RCC பெட்டிகள் (8m (L) x 17m (W) × 6.85m (H)
பிரிவுகள் 24 மீட்டர் தள்ளி காற்று-தள்ளும் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்பட்டன.
இந்த திட்டம் செப்டம்பர் 2, 2025 அன்று நிறைவடைந்தது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும்
இந்தியாவின் மான்டேகார்லோ லிமிடெட்
இணைந்து
ரயில் பாதையின் அடியில் தள்ளப்பட்ட
மிகப்பெரிய RCC பெட்டி அமைப்புக்கான
சாதனையைப் அக்டோபர் 29, 2025 அன்று படைத்தது.
தொரப்பள்ளி அக்ரஹாரம் வழியாக பெங்களூர் செல்லும் சாட்டிலைட் ரிங் ரோடான NH948A தேசிய நெடுஞ்சாலையில் இன்று ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் 17 மீட்டர் அகலமும், 24 மீட்டர் நீளமும் கொண்ட கல்வெர்ட்டினை கிட்டத்தட்ட 20 நாட்களுக்குள்ளாக தொழில்நுட்பம் (pre cost technology) மூலம் ஜாக்கிகள் வைத்து நகர்த்தி சரியான இடத்தில் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.
இந்த சாதனையை
ஆசிய சாதனை புத்தகம் (Asia Book of Records) மற்றும்
இந்திய சாதனை புத்தகம் (India Book of Records) அங்கீகரித்துள்ளது.
இந்த சிறப்பான பணியை செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினையும்,
ஒப்பந்ததாரர் மான்டேகார்லோ மற்றும் அனைத்து பொறியாளர்களையும் இன்று கவுரவிக்கப்பட்டு,
ஆசிய சாதனை புத்தகம்
இந்திய சாதனை புத்தகம்
வழங்கிய
உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ரயில்வே தண்டவாளப்பாதையில் ரயில் செல்லும்போதே கிரிடர் உதவியுடன் இப்பணி செய்யப்பட்டது.
கீழே உள்ள கல்வெர்ட்டை மூன்று ரீச்சா உள்ளே தள்ளிவிட்டு,
ரயில்வே டிராக்கிற்கு எர்த் வைத்து எம்பேக்மெண்ட் கொடுத்து சரிசெய்துள்ளனர்.
இதுஒரு பொறியியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை இவ்வளவு நீளம், அகலமான கல்வெர்ட்டினை குறைவான நாட்களில் செய்தது கிடையாது.
இவற்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கே பெருமையான நிகழ்வாக உள்ளது.
இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாண்டிக்கார்லோ நிறுவன தலைமை
திட்ட மேலாளர்
திரு.ஆர்.வி.கிஷோர் நாயக்,
மேலாண்மை இயக்குநர்
திரு.பிர்ஜேஷ் பட்டேல்,
முதுநிலை துணைத்தலைவர்
திரு.சசி பூசன் சிங்.
மற்றும்
தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்
திரு.ரமேஷ்,
வட்டாட்சியர்
திரு.குணசிவா
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
---------------------------------.