கிருஷ்ணகிரி மாவட்டம்
வடகிழக்கு பருவமழை
முன்னேற்பாடு பணிகள்
மற்றும்
அரசின் முன்னோடித் திட்டங்கள்,
வளர்ச்சிப் பணிகள்
குறித்த ஆய்வுக் கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். நவ. 6. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடித் திட்டங்கள்,
வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நவ.6-ம் தேதி அன்று நடந்த இந்த கூட்டத்திற்கு
அரசு செயலாளர்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை,
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,
அவர்கள், தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில்
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழை விபரங்கள் குறித்தும்,
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும்,
நிலையான மழைமாமணி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும்,
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சேமிப்பு நிலை குறித்தும்,
நீர் வடிகால் நிலையங்கள் சுத்திகரிப்பு குறித்தும்,
மழைக்காலங்களில் ஏற்படும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் குறித்தும்,
தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்தும்
இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பருவமழை காலத்தில் அதிக அளவு வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளை கண்காணிப்பு அலுவலர்கள் தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாமில் தங்க வைத்து
அவர்களுக்கு தேவையான
உணவு,
மருத்துவ வசதி,
குடிநீர்,
மின்சாரம்,
கழிப்பறை
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.
மேலும்
வெள்ள வடிக்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு குடிநீரில் குளோரிநேசன் மேற்கொள்ள வேண்டும்.
அப்பகுதிகளில் கொசு மருந்து புகைப்பான்கள் மூலம் தெளித்திட வேண்டும்.
காய்ச்சல் அதிகம் காணப்பட்டால் அவ்விடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும்.
பொதுமக்களுக்கு குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்திட வேண்டும்.
அனைத்து நீர் நிலைகளிலும், உபரி நீர் போக்கி, மண் கரைகள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும்.
வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை இணைந்து செயலாற்றிட வேண்டும்.
மேலும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகள் குறித்தும்,
ஆட்சேபனை இல்லாத நிலங்களில் குடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் நத்தம் பட்டாக்கள்,
அரசு புறம்போக்கு நிலங்களை கிராம நத்தமாக மாறுதல் செய்த பட்டாக்கள்,
தனிநபர் பட்டா உள்ளிட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள விபரங்கள்,
தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும்,
ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1058 முழுநேர மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மூலம் 5,67,710 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
தாயுமானவர் திட்டம்
மேலும், 65-70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம் ஆகஸ்ட் 2025 ல் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், 65 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 27,927 குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொது விநியோக திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என
அரசு செயலாளர்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை,
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
மாவட்ட வன அலுவலர்
திரு.பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப.,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)
திரு.பெரியசாமி,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கோபு,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.க்ரீதி காம்னா இ.ஆ.ப.
மற்றும் அனைத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------.