கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மரகதாம்பாள் உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியேற்றம்
ஒசூர். மார்ச். 9. -
ஒசூர் மரகதாம்பாள் உடனுறை
சந்திர சூடேஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு
திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒசூரில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான
மரகதாம்பாள் உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயிலில்
மார்ச் 14 -ம் தேதி வெள்ளிக்கிழமை
தேர்த் திருவிழா நடக்கிறது.
திருக்கொடியேற்றம்
தேர்த்திருவிழாவை
முன்னிட்டு மார்ச் 8-ம் தேதி
காலை 8-45 மணிக்கு கோயிலில் சிறப்பு ஹோமங்கள் நடத்தி பூஜைகள் நடந்தன.
அதைத் தொடர்ந்து கோயிலில் நடந்த,
கொடியேற்ற நிகழ்ச்சியில்
தலைமை அர்ச்சகர்
வாச்சீஸ்வரன்
தலைமையில் விநாயகர், சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி, திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
--------------------------------------------.
தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள்
மார்ச் - 8-ம் தேதி
கொடியேற்றம்,
சிம்மவாகன உற்சவம்
9-ம் தேதி
மயில் வாகன உற்சவம்
மார்ச் - 10-ம் தேதி -
இரவு 9 மணிக்கு
நந்தி வாகன உற்சவம்.
11-ம் தேதி -
இரவு 9 மணிக்கு
நாக வாகன உற்சவம்.
12-ம் தேதி
காலை 9மணிக்கு
ஏகாதசவார ருத்ராபிஷேகம்.
இரவு 9 மணிக்கு
ரிஷப வாகன உற்சவம்.
மார்ச் - 13-ம் தேதி
பகல் - 12 மணிக்கு
ருத்ராபிஷேகம்,
பிராம்ஹன சந்தர்ப்பனை
இரவு - 7 மணிக்கு
புஷ்ப அலங்காரம்.
இரவு - 8 மணிக்கு
புஷ்ப சாற்றுப்படி
இரவு - 9 மணிக்கு
திருக்கல்யாண உற்சவம்.
இரவு - 11.30 மணிக்கு
யானை வாகன உற்சவம்.
மார்ச் - 14-ம் தேதி
காலை - மணிக்கு
பிரம்ஹ தேர் உற்சவம்
திருத்தேர் வடம் பிடித்தல்
மார்ச் - 15-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
இன்னிசை நிகழ்ச்சி
இரவு - 10 மணிக்கு
ராவண வாகன உற்சவம்.
பல்லக்கு உற்சவம்.
மார்ச் - 16-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
தெப்ப உற்சவம்.
இரவு - 10 மணிக்கு
குதிரை வாகன உற்சவம்.
மார்ச் - 17-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
புஷ்ப பல்லக்கு உற்சவம்.
மார்ச் - 18-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
புஷ்ப பல்லக்கு உற்சவம்.
மார்ச் - 19-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
பல்லக்கு உற்சவம்.
மார்ச் - 20-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
பிரகார உற்சவம்.
மார்ச் - 21-ம் தேதி
இரவு - 7 மணிக்கு
சயனோற்சவம்
ஆகிய நிகழ்ச்சிகள்
தேர்திருவிழாவை
முன்னிட்டு
நடைபெறுகிறது.
-------------------------------------------.