கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம்
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்"
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
3,55,197 மகளிருக்கு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
வழங்கப்பட்டு வருகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்
ஓசூர். டிச. 12. –
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
சென்னை, ஜவஹர்லால் நேரு
உள்விளையாட்டு அரங்கில்
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்"
தமிழ்நாட்டின் சாதனை பெண்களின்
மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
மற்றும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
திட்டத்தின் 2 -வது கட்ட விரிவாக்கம்
தொடங்கி வைத்து,
மகளிர் உரிமைத்தொகை
பெறுவதற்கான
ஏடிஎம் கார்டுகளை
இன்று (12.12.2025) வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள்
கலைக் கல்லூரி வளாகத்தில்,
நடைபெற்ற
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
திட்டத்தின் 2 வது கட்ட
விரிவாக்க நிகழ்ச்சியில்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்),
திரு.தே.மதியழகன் (பர்கூர்),
திரு.டி.ராமச்சந்திரன் (தளி)
ஆகியோர் 40,594 மகளிர்களுக்கு
ஏடிஎம் கார்டுகளை இன்று (12.12.2025) வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்கு
புதிய பல திட்டங்களை அறிமுகப்படுத்தி
மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள்.
மகளிர்களுக்காக மட்டும்
விடியல் பயணம் திட்டம்,
கலைஞர் மகளிர்
உரிமை தொகை திட்டம்,
புதுமைப் பெண் திட்டம்,
பணிபுரியும் மகளிருக்கு
"தோழி விடுதிகள்",
மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து,
மகளிர் சுய உதவிக்குழு கடன்
உச்சவரம்பு அதிகரிப்பு,
அரசு அலுவலகங்களில்
பணிபுரியும் மகளிருக்கு
மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்வு,
தொழில் முனைவோராக மகளிர்,
காவல் துறை மகளிருக்கு
அறநிலைத்துறையில் பெண் ஒதுவார்கள்
உள்ளிட்ட திட்டங்கள்
செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
பெறமுடியாமல் விடுப்பட்ட
மகளிர் அனைவரும்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்
விண்ணப்பிக்குமாறும்,
அதனை பரிசிலனை செய்து
விடுபட்டவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என
அறிவித்திருந்தார்.
அதனைடிப்படையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்
விண்ணப்பங்கள் பெறப்பட்ட மனுக்களில்
40,594 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர்
உரிமைத்தொகை
இன்று வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
5,78,196 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
அதில்
முதற்கட்டமாக 3,14,603 மகளிருக்கும்,
இன்று (12.12.2025) இரண்டாம் கட்டமாக
40,594 மகளிர்களுக்கும் என
மொத்தம் 3,55,197 மகளிர்களுக்கு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
வழங்கப்பட்டு வருகிறது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்,
தனி துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
திரு.சங்கர்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.சௌமியா,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு.மகாதேவன்,
இந்தியன் வங்கி
முன்னோடி வங்கி மேலாளர்
திரு.சரவணன்,
வட்டாட்சியர்கள்
திரு.ரமேஷ்
திரு.சின்னசாமி,
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.உமாசங்கர்,
அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்
முனைவர்.சௌ.கீதா,
தனி வட்டாட்சியர்கள்
திருமதி.மகேஸ்வரி
திரு.மோகன்தாஸ்,
துணை வட்டாட்சியர்கள் மற்றும்
வருவாய் துறை, ஊரக வளர்ச்ஃ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------------.