கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பள்ளிக்கல்வி துறையின்
குறுவள மைய அளவிலான
கலைத்திருவிழா போட்டிகளில்
வெற்றி பெற்ற
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
பரிசுகள் – சான்றிதழ்கள் வழங்கி
தலைமையாசிரியர் பாராட்டு.
(படம் - முதலிடம் பிடித்த மாணவர்களுடன்
தலைமையாசிரியர் பொன் நாகேஷ் மற்றும்
ஆசிரியர்கள் உள்ளனர்.)
ஓசூர் . ஆகஸ்ட் . 30. -
பள்ளிக்கல்வி துறை
கலைத்திருவிழா போட்டிகள்
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடத்தப்பட்ட
குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில்
பங்கேற்று வெற்றி பெற்ற பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு,
தலைமையாசிரியர்
பொன்நாகேஷ்,
பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
(படம் - பரதநாட்டியத்தில் இரண்டாவது பரிசு பெற்ற மாணவிகளுடன் தலைமையாசிரியர் பொன் நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.)
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் ஒன்றியம் ஓசூர் மாநகராட்சி மூன்றாவது வார்டில் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இதில் 882 மாணவர்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகிறார்கள்.
(படம் - கிராமிய நடனத்தில் இரண்டாவது பரிசு பெற்ற மாணவர்களுடன் தலைமையாசிரியர் பொன் நாகேஷ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.)
பள்ளிக்கல்வி துறையின் ஆணைப்படி ஆண்டுதோறும்
கலை திருவிழா போட்டிகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையே கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் நடப்பு ஆண்டு பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் முதலிடம் பிடித்த
13 பள்ளிகளின் மாணவர்களுக்கு
குறுவளமைய அளவில்
ஜூஜூவாடி அரசு தொடக்கப்பள்ளியில்
ஆகஸ்ட் 26 மற்றும் 28-ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்
திருமதி. காயத்ரி
அவர்கள் தலைமை வகித்தார்.
இந்த கலைத்திருவிழா போட்டிகளில்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் 18 நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்த 21 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 7 நிகழ்ச்சிகளில் நடந்த போட்டிகளில்
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி
மாணவர்கள் பங்கேற்று
முதலிடத்தை தட்டிச் சென்றனர்.
முதலிடம் பெற்ற 7 மாணவ, மாணவிகளின்
பெயர் பட்டியல்
1. களிமண் பொம்மைகள் 1 & 2
🥇SUBIKSHA. D.
2. வண்ணம் தீட்டுதல்
(கொடுக்கப்படும் படத்தில்)
🥇VIAM MAHATO. P.
3. ஒப்புவித்தல் போட்டி -
மழலையர் பாடல் (தமிழ்)
Tamil Rhymes including
ஆத்திச்சூடி
🥇 SAI PRIYA. S.
4. தனிநபர்/பாவனை நடிப்பு
(Mono Acting / Miming )
🥇 R.SUMAN.
5. மாறுவேடப் போட்டி 3 TO 5
🥇 R.SUMAN.
6. மெல்லிசை (தனிப்பாடல்)
🥇 GOKULAKANNAN. K.
7. செவ்வியல் நடனம் தனி
🥇 SHANJINI. M.
ஆகிய 7 மாணவ, மாணவிகள் முதல் இடத்தில் வெற்றி பெற்று பேடரப்பள்ளி அரசுப்பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
சான்றிதழ் மற்றும் பரிசுகள்
மேலும் இந்த கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள்
8 நிகழ்ச்சிகளில் இரண்டாம் இடம்
மற்றும்
2 நிகழ்ச்சிகளில் மூன்றாம் இடம் பெற்றனர்.
குறுவள மைய கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற
22 மாணவர்களுக்கும்,
பேடரப்பள்ளி அரசுப்பள்ளி வளாகத்தில்
தலைமை ஆசிரியர்
திரு.பொன் நாகேஷ்
சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள்
கலந்து கொண்டு
அடுத்த மாதம் ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டியிலும் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று மாணவ. மாணவிகளை பாராட்டினர்.
-------------------------------------------.