ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் சார்பாக
முப்பெரும் விழா
ஓசூர். டிச. 15. –
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் சார்பில் முப்பெரும் விழா ITC பார்ச்சூன் ஓட்டலில் டிசம்பர்
14-ம் தேதி நடைபெற்றது.
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில்
இயங்கி வரும் ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப்
சார்பில் Rtn PDG ஆர். வாசு அவர்கள் ரோட்டரி ஒருங்கிணைப்பாளராக 2025-28-ம் ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும்,
Rtn S. லோகநாதன் ரோட்டரி மாவட்ட ஆளுநராக 2027-28-ம் ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், மேலும்
Rtn CA S. சுதாகர், ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் எண்டோமெண்ட் டோனர் என்ற முறையில் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு
நன்கொடை கணக்கை தொடங்கியதற்கும் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
மாவட்ட ஆளுநர்
Rtn V.சிவக்குமார்
இந்த நிகழ்ச்சியில் RID 2982 மாவட்ட ஆளுநர்
Rtn V.சிவக்குமார், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், சங்க உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு
வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து
எண்ணற்ற நலத்திட்டங்கள்
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் நம்முடைய ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எண்ணற்ற நலத் தொண்டுகள் செய்து வருகின்றனர்.
இதில் முக்கியமாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு
ஓசூரில் உள்ள ரோட்டரி சங்கங்கள் இணைந்து
எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளனர்.
மேலும் இலங்கை வாழ் மாணவ, மாணவிகளுக்கு
315 சைக்கிள்களை நன்கொடையாக அளித்துள்ளனர்.
ரோட்டரி பவுண்டேஷன்
மேலும் ரோட்டரி பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு
இதுவரை ஒரு லட்சத்து 56 ஆயிரம் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் Rtn CA S.சுதாகர், துணை ஆளுநர் Rtn RM. பன்னீர்செல்வம், சங்க தலைவர் Rtn சாய் பாலாஜி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
Rtn R. சரவணன், மற்றும் சிப்காட் சங்க உறுப்பினர்கள் இணைந்து நடத்தினர்.