ஜூன் 27 – 1872 –
சூரிய ஒளிமறைப்புகளை ஆய்வு செய்ய,
11 வானியல் திட்டங்களில் ஈடுபட்ட
வானியலாளர்
ஏபர் தவுசுட் கர்டிசு
153 – வது பிறந்ததினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜூன். 27. –
வானியலாளர்
ஏபர் தவுசுட் கர்டிசு...
இவரது தந்தையார் ஆர்சன் பிளேர் கர்டிசு.
இவரது தாயார் சாரா எலிசா தவுசுட்.
இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
இவர் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வானியல் பட்டம் பெற்றார்.
இவர் இலிக் வான்காணகத்தில் 1902 முதல் 1920 வரை பணிபுரிந்தார்.
இவர் ஜேம்சு எட்வார்டு கீலர் அவர்களின் ஒண்முகில்களின் அளக்கையைத் தொடர்ந்தார்.
இவர்
1912 இல் பசிபிக் வானியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1918 இல் மெசியர் 87 பால்வெளியை நோக்கிக் கண்டறிந்தார்.
இவர் முதன்முதலாக, பால்வெளி முனைத்தாரையைக் கண்ணுற்றார்.
இதை இவர்
"மெல்லிய பொருண்மக் கோட்டால் பால்வெளிக்கருவுடன் இணைந்த
வியப்புமிக்க நீள்கதிர்க்கற்றை"
என விவரித்தார்.
இவர் 1920 இல் அலெகனி வான்காணக இயக்குநராக அமர்த்தப்பட்டார். அதே ஆண்டில் இவர் ஆர்லோவ் சேப்ளே அவர்களுடன் ஒண்முகில்கள், பால்வெளிகளின் தன்மைபற்றியும் புடவியின் உருவளவு பற்றியும் நடந்த பெருவிவாதத்தில் பங்கேற்றார்.
இவர் தற்போது ஏற்கப்பட்டுள்ள பால்வெளிகள் பற்றிய கண்ணோட்டத்தை முன்மொழிந்தார்.
இவர் 1925 இல் படலத் தட்டு ஒப்பீட்டளவியின் ஒரு வடிவமைப்பை புதிதாக உருவாக்கினர்.
இது ஒரே தடவையில் 8×10 சதுர அங்குல அளவுகொண்ட இரண்டு தட்டுகளை பட்டக அணிகளைப் பயன்படுத்தி, வழமானபடி தட்டுகளை அடுத்தடுத்து பக்கத்தில் வைக்காமல், அடுக்குகளாகச் சேர்த்துப் பின் உரிய திசைவைப்பில் இருத்தினார்.
இதனால் கருவியின் உடல் 60×51 செ.மீ பரப்பளவை அளக்க முடிந்துள்ளது. இந்தக் கருவி 2011 ஆகத்து வரை இலிக் வான்காணகத்தில் பொட்டலமாக்க் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
இக்கருவி பற்றிய விவரிப்பு அலெகனி வான்காணக வெளியீடுகளில் தொகுதி எட்டு: பகுதி இரண்டில் வெளியிடப்பட்டது.
இவர்
1930 இல் மிச்சிகன் பல்கலைக்கழக வான்காணகங்களின் இயக்குநராக அமர்த்தப்பட்டார்.
என்றாலும் ஆன் ஆர்போரில் இவர் பல்கலைகழகத்துக்காக வடிவமைத்த பேரளவு ஒலித்தெறிப்புத் தொலைநோக்கியை கட்டியமைத்தல், பெரும்பொருளியல் சரிவின் நிதிப் பற்றாக்குறையால்தவிர்க்கப்பட்டது.
இவர் மெக்மாத்-உல்பர்ட் தனையார் வான்காணகத்தை அங்கேலசு ஏரி எனுமிடத்தில் உருவாக்குவதில் பங்களித்துள்ளார்.
இவர் 1942 ஜனவரி 9 இல் இறந்தார்.
-------------------------------------------------.