"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்,
மாசிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளியில்,
"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
டிசம்பர் 6-ம் தேதி அன்று நடைபெற உள்ளது
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
ஓசூர். டிச. 4. -
ஓசூர் வட்டம்,
மாசிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளியில்,
"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்
டிசம்பர் 6-ம் தேதி அன்று
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் கூறியிருப்பதாவது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க,
"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்,
ஒசூர் வட்டாரத்தில் உள்ள
மாசிநாயக்கனப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளியில்
06.12.2025 அன்று
காலை 09.00 மணி முதல்
மாலை 05.00 மணி வரை
நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான
ரத்த பரிசோதனை,
கர்ப்பிணிதாய்மார்களுக்கு எஸ்கேன் பரிசோதனை,
X-Ray, ECG, ECHO,
Ultra Sound,
கண் பரிசோதனை மற்றும்
மகப்பேறு மருத்துவம்
போன்ற 17 வகையான சிறப்பு நிபுணர்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும்,
இம்முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு
முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை
வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும்
தொழிலாளர்களுக்கும்
இலவசமாக அடையாள அட்டை
வழங்கப்படுகிறது.
அனைத்து பொதுமக்களுக்கும்
இலவசமாக உடல் பரிசோதனைகள்
மற்றும்
இருதய பரிசோதனை
செய்யப்படுகிறது.
இம்முகாமில்
தொற்றா நோய்,
உயர் இரத்த அழுத்தம்,
கண் பார்வை பரிசோதனை,
சிறுநீரக பரிசோதனை,
இதய பரிசோதனை
மற்றும்
நரம்பியல் மருத்துவம்,
சித்த மருத்துவம்,
பெண்களுக்கான மார்பக
புற்றுநோய் பரிசோதனை
மேலும்
பல் சிகிச்சை
உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவர்கள்
மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட
உள்ளதால் அனைத்து பொது மக்களும்
கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------.