கிராம சபை கூட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்கள்
சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து
காணொளி காட்சி வாயிலாக
தமிழ்நாடு முழுவதும் உரை
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தில்
கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
ஓசூர் . அக். 11. -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்கள்
சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து
காணொளி காட்சி வாயிலாக உரை
தமிழ்நாடு முழுவதும் உரை
அக்டாபர் 11-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உரையாற்றியனார்.
அதைத் தொடர்ந்து
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தில்
கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
அக்.11-ம் தேதி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது:
நமது மாவட்டத்தில் உள்ள
333 ஊராட்சிகளில்
இன்று கிராமசபை கூட்டம்
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிராம மக்களின் தேவைகளை கேட்டறிந்து அதில் குறைந்தது
7 விதமான குறைகளை தேர்வு செய்து அதில் முதன்மையாக கருதும் 3 பணிகளுக்கு
கிராம சபையில் ஒப்புதல் அளிப்பது,
இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள்,
சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல்,
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மற்றும் விவாதித்தல்,
ஊரக பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,
வடக்கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி
திட்டம் II,
தூய்மை பாரத இயக்க (ஊரகம்),
தொழிலாளர் துறை அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை என்பது குறித்தும்,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தாயுமானவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை குறித்தும்,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்,
கிராமபுற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம்,
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்தல்,
சபா சார் செயலி செயல்பாடுகள்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை -பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம்
ஆகியவை குறித்து இன்று நடைபெற்ற
கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும்
பொதுமக்கள் தற்போது மழைகாலமாக இருப்பதால் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நீர் தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும். இல்லை என்றால்
லார்வா கொசுக்கள் உற்பத்தியாகி
டெங்கு போன்ற நோய் ஏற்படும் நிலை உருவாகிறது.
மக்கும் குப்பை
மக்கா குப்பை
அதேப்போல குப்பைகளை வெளியிடங்களில் கொட்டாமல் மக்கும் குப்பை மக்கா குப்பைகளாக பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நீர் நிலை பணிகளை தேர்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
இந்த ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது,
தூய்மை பாரத இயக்கம் சார்பாக இந்த கிராமம் குப்பை இல்லா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.
கழிப்பறை இல்லாத வீடுகளில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் கழிப்பறைகளை கட்டிக்கொள்ளலாம்.
மஞ்சள் பை
மேலும் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் அகற்ற வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தாமாக முன் வந்து வீட்டு வரி செலுத்துகிறார்கள்.
அதேபோல புதிய வீடு கட்டுபவர்கள் வீட்டு பிளான்களை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து உடனடியாக அனுமதி பெறலாம்.
பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மஞ்சள் பைகளை உபயோகிக்க வேண்டும்.
மரக்கன்றுகள் நடவு
நமது மாவட்டத்தில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊராட்சியிலும் நர்சரி அமைத்து மரக்கன்று நடவு செய்து வளர்க்க வேண்டும்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டம்,
வீட்டு மனை பட்டா இருந்து வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், பி.எம்.ஜன் மன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வீடுகட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
தற்போது வீடுகளுக்கு மானிய தொகையில்
பி.எம். சூரிய திட்டம்
படுத்தப்பபட்டு வருகிறது.
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் உங்கள் ஊராட்சி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
திரு. மகாதேவன்,
இணை இயக்குநர் (வேளாண்மை)
திரு.காளிமுத்து,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திரு.கார்த்தி,
ஊராட்சி செயலர்
திரு.வெங்கடராஜ்
மற்றும் தோட்டக்கலைத்துறை, மருத்துவ துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
----------------------------------------------.