கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள்
மற்றும் குத்தகை விவசாயிகள்
பாதுகாப்பு சங்கம் சார்பில்
பல கோரிக்கைகளை வலியுறத்தி
தர்ணா போராட்டம்
ஓசூர். ஏப்ரல். 18. –
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்
கோயில்,
மடம்,
வக்பு வாரியம்,
இனாம்
ஆகிய இடங்களில் குடியிருப்பவர்கள் சாகுபடி செய்பவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓசூரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நடந்த இந்த தர்ணா போராட்டத்திற்கு
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க
மாவட்ட செயலாளர்
N. அனுமப்பா
தலைமை வகித்தார்.
வட்டச் செயலாளர்
M.ரவி
முன்னிலை வகித்தார்.
இந்த தர்ணா போராட்டத்தில்
மாநில துணைத்தலைவர் AIKS
முன்னாள் எம்எல்ஏ
P.டில்லிபாபு Ex.MLA
பங்கேற்று
சிறப்புரையாற்றினார்.
மற்றும்
AIKS மாவட்டத் தலைவர்
M.முருகேஷ்,
AIKS மாவட்ட செயலாளர்
C.பிரகாஷ்,
AIKS P.நாகராஜ் ரெட்டி,
AIKS வட்ட செயலாளர்
M.முனிராஜ்,
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர்
M.M. ராஜு,
AIKS வட்ட பொருளாளர்
A. ஆனந்தகுமார்,
AIKS மாவட்ட துணைச் செயலாளர் R.K.தேவராஜ்,
AIKS வட்டத்தலைவர்
A.ராஜரெட்டி
ஆகியோர்
உரையாற்றினார்கள்.
இந்த தர்ணா போராட்டத்தில்
அறநிலையத்துறை சட்டம் 34-ன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்தும் கிரைய பட்டா வழங்க வேண்டும்.
கிரைய பட்டா கோரிக்கை நிரைவேறும் வரை பயனாளிகளுக்கு வாடகையை சட்டப்பிரிவு 34A-ன்படி வாடகை நிர்ணயிப்பதை கைவிட்டு மக்களின் வாழ்நிலைக்கேற்ப குறைந்தபட்ச வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து மறு ஏலம் என்ற பெயரில் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட்டு, பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆர்.டி.ஆர்.
(Record of tenant Rights)பதிவு செய்து கொடுத்திட வேண்டும்.
2019-ல் வெளியிடப்பட்ட அரசாணை 318ஐ செயல்படுத்திட சட்டமன்றத்தில் அறிவித்தபடி சீராய்வு மனுவை மாநில அரசு உடன் தாக்கல் செய்திட வேண்டும்.
கோயில் பெயரில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாத இனாம் நிலங்கள் பலவகை புறம்போக்கு இடங்களை UDR-ல் தவறுதலாக பெயர் மாற்றம் ஆகியுள்ள சொத்துக்களின் மீது அறநிலையத்துறை உரிமை கோருவதை கைவிட வேண்டும்.
பயனாளிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு மற்றும் வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்திட வேண்டும்.
அறநிலைய சட்டப்பிரிவுகள் 72B, 78, 78A, 79C ஆகிய பிரிவுகளின் கீழ் பயனாளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும்.
வக்ஃபோர்ட் இடங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் சாகுபடி செய்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட் ஆகிய வருவாய் வட்ட கிராமங்களில் கோயில் நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
மூன்று தலைமுறைகளுக்கு மேலாக சாகுபடி செய்து வரும் நிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றக் கூடாது
ஆகிய கோரிக்கைகளை
வலியுறுத்தி முழக்கமிட்டபடி
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில்
அக்கொண்டப்பள்ளி
B.நாகராஜ ஆச்சாரி,
இடையநல்லூர்
S.மனோகர்,
பாரந்தூர் HSC
G.கிருஷ்ணப்பா,
எம்.பாரந்தூர்
விவேகானந்த்,
கெம்பத்பள்ளி
ஸ்ரீதர்,
கெம்பத்பள்ளி
K.சிக்கண்ணா,
பொம்மண்டப்பள்ளி
சுப்பிரமணி,
ஒன்னல்வாடி
K.நாகராஜ்,
கொத்தூர்
சம்பங்கி,
மத்திகிரி
K.முனிராஜ்
மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.