ஓசூர் மாநகராட்சி
வரிவிதிப்பு மற்றும்
நிதிக்குழு கூட்டம்
ஓசூர். டிச. 19. –
நிதிக்குழு தலைவர்
சென்னீரப்பா
ஓசூர் மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிக் குழு தலைவர் சென்னீரப்பா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த், உதவி ஆணையாளர் டிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மொத்தம் ரூ.150 கோடி வரி
இந்த கூட்டத்தில் குழு தலைவர் சென்னீரப்பா பேசியதாவது, மாநகராட்சியில் நடப்பாண்டில்
தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் வரி,
உள்ளிட்ட அனைத்து வரிகள் மற்றும் நிலுவைத் தொகை என மொத்தம் ரூ.150 கோடி வரி வசூல் செய்ய வேண்டும்.
ரூ.34 கோடி வரி வசூல்
ஆனால் ரூ.34 கோடி மட்டுமே வரி வசூலாகி உள்ளது.
ரூ.116 கோடி நிலுவை
மீதமுள்ள ரூ.116 கோடி தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15,000 கட்டிடங்களுக்கு வரி
நிர்ணயம் நிலுவை
ஓசூர் மாநகராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு விரி நிர்ணயம் செய்ய வேண்டி உள்ளது.
வீட்டு வளாகத்தில் ஷெட் அமைத்து இருசக்கர வாகனம், கார் ஆகியவை நிறுத்துவதற்கும் வரி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
வரி வசூலிக்கும் பணியில் 11 ஊழியர்கள்
மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியில் 11 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் வரி வசூலிப்பதில் தாமதம் மற்றும் தொய்வு ஏற்படுகிறது.
கூடுதல் பணியாளர்கள்
ஆகவே வரி வசூலிக்க கூடுதல் பணியாளர்களை
நியமிக்க வேண்டும். வரி வசூலிக்க செல்லும் போது ஊழியர்கள், பொதுமக்களை மிரட்டும் வகையிலும், ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட முயல்வதாகவும் மக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் மக்களை நல்ல முறையில் அணுகி வரி வசூல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மாரக்கா, வரலட்சுமி, மற்றும் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள், வரி வசூல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.