கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
(11-7-25 முதல் 22-7-25 வரை)
14-வது புத்தக கண்காட்சி
110 அரங்குகள்,
1 லட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கானப் புத்தகங்களுடன்,
3 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வாங்கும் அனைத்துப் புத்தகங்களையும்
10 சதவிகிதம் தள்ளுபடி விலையில்
பெற்றுக்கொள்ளலாம்.
"தொட்டுத் தொட்டு பார்த்தால் காகிதம்
அதைத் தொடர்ந்து படித்தால் ஆயுதம்”
என்பதை மனதில் வைத்து,
இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் புத்தகம் வாங்கி படிக்கவேண்டும்
என மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் வேண்டுகோள்.
“ஓசூரில் 14-வது புத்தகத் திருவிழா
ஓசூர் மக்கள் போற்றும் பெருவிழா”
வாசகர்களின் பேராதரவுடன்
தொடங்கியது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள்
துவக்கி வைத்தார்.
ஓசூர். ஜுலை. 11. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி, மூக்காண்டப்பள்ளி,
ஹோட்டல் ஹீல்ஸ் கன்வர்சன் ஹாலில்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
மற்றும்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
இணைந்து நடத்தும்
14-வது ஒசூர் புத்தகத் திருவிழாவை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் இன்று (11.07.2025) துவக்கி வைத்து,
புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது:
"தொட்டுத் தொட்டு பார்த்தால் காகிதம் அதைத் தொடர்ந்து படித்தால் ஆயுதம்"
என்பதை மனதில் வைத்து, இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் புத்தகம் வாங்கி படிக்கவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில்
ஆண்டுதோறும் மாவட்டங்களில் புத்தகத்திருவிழா நடத்த ஆணையிடப்பட்டது.
அதற்கான நிதியும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒசூர் ஒட்டல் ஹீல்ஸ், கன்வர்சன் ஹாலில்,
இன்று 11.07.2025 முதல் 22.07.2025 வரை 12 நாட்கள் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் மொத்தம்
110 அரங்குகள்,
1 இலட்சம் தலைப்புகளில் கோடிக்கணக்கானப் புத்தகங்களுடன்,
3 இலட்சம் பார்வையாளர்கள் வருவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வாங்கும் அனைத்துப் புத்தகங்களையும்
10 சதவிகிதம் கழிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
பேருந்து வசதி
நாள்தோறும் அரசு பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்ல பல தன்னார்வலர்களின் உதவியோடு
ரூ.50 மதிப்புள்ள கூப்பன்கள்
வழங்கப்பட உள்ளது.
இந்த காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களின் மூலம் அனைவரும் செல் போன்களில் மூழ்கி இருக்கிறோம்.
மேலும், ஒருவரின் வரலாறு பற்றி தெரிய வேண்டுமென்றால் நாம் சினிமாவை பார்த்து தான் தெரிந்துக்கொள்கிறோம்.
ஆனால் புத்தகம் மூலம்
பல்வேறு வரலாறுகள்,
சிறப்பு ஊக்கமூட்டல் அறிவியல் செயல்பாடுகள்,
விஞ்ஞானி சந்திப்பு,
யோகா,
தொலைநோக்கி வான்வெளி நோக்குதல்
மற்றும்
சமூக, கல்வி, வாழ்வியல் பங்கேற்பு குறித்தச் செயல்பாடுகள் அறிந்துக்கொள்ளலாம்.
மேலும்,
எழுத்தாளர்கள் எழுதுவது
ஒரு சமூக சீர்த்திருத்துவதற்காக,
சமூகத்தில் பார்க்க கூடிய அவலங்களை நாம் கண்டும் காணமல் போகும் போது
ஒரு எழுத்தாளர் சமூகத்தின் பார்வையினை,
அவருடைய வலியினை பிரதிபளிப்பதான் அவருடைய எழுத்து.
அவரை தொடர்ந்து நாம் எழுத வைக்க வேண்டும் என்றால்
நாம் எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டும், அவரை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும்,
நாள்தோறும் 05.00 மணி முதல் 06.00 மணி வரை குழந்தைகளின் கண்கவர் பல்சுவை கலை நிகழ்ச்சிகளும்,
சிந்தனை அரங்கம் நிகழ்வில்
தமிழகத்தின் சிறந்த புத்தக எழுத்தாளர்கள்,
சொற்பொழிவாளர்கள்,
சமூக செயற்பாட்டாளர்கள்,
மக்கள் விஞ்ஞானிகள்
ஆகியோர்களின்
சிறப்புச் சொற்பொழிவுகள்,
பட்டிமன்றம்,
பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்
உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
புத்தக சேமிப்புத் திட்டம்,
தமிழகப் புத்தகத் திருவிழாக்களிலேயே
ஓசூர் புத்தகத் திருவிழாவில் மட்டுமே புத்தக சேமிப்புத் திட்டம் நடத்தப்படுகிறது.
புத்தக ஆர்வலர்கள்,
நூலகப்பிரியர்கள்,
எழுத்தாளர்கள்,
சாமானியர்கள்,
கல்வியாளர்கள்,
தொழிலாளர்கள்,
மாணவர்கள்,
இல்லத்தரசிகள்
அனைவரையும் ஒருங்கிணைத்து
மாதாமாதம் ரூ.100 செலுத்தி
புத்தகச் சேமிப்புத் திட்டத்தில் இணைந்து வருடம் முழுவதும் 12 மாதங்கள் பணம் செலுத்திப் புத்தகத் திருவிழாவில் ரூ.1400-க்குப் புத்தகங்களைப் பெற்று பயனடைகிறார்கள்.
இத்திட்டத்தில் 300 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த வருடம் சிறப்பித்துள்ளனர்.
மகளிர் சங்கமம்
மகளிர் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக மகளிர் சங்கமம் என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சங்கமத்தில் மகளிருக்கான
விவாதமேடை,
பாட்டுப்போட்டி,
குறு மற்றும் மௌன நாடகம்,
மாறுவேடப்போட்டி
என பலபோட்டிகளும்
அரங்கத்தினுள் உடனடி போட்டியாக
அந்தநாள் ஞாபகம்,
வார்த்தை ஜாலம்,
நடிங்க கண்டுபிடிங்க,
விடுகதைகள்
என பல நிகழ்வுகளும்,
அரசுப்பள்ளி மலைவாழ் குழந்தைகளுக்காக அறிவியல் மற்றும் உளவியல் குறித்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கான சங்கமத்தில்
ஜில் ஜாலி கலாட்டா
என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியும், பெண்களுக்காகவே பிரத்தியேக ஒரு நாள் நிகழ்வு நடைபெற உள்ளது.
ஓவியப்போட்டி
எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும்,
பொதுமக்களும் தங்களுடைய கற்பனைகளைக் கைத்திறனால் ஓவியம் ஆக்கும் போட்டி,
வினாடி வினா போட்டி
மாணவர்களிடையே இருக்கக்கூடிய அறிவியல் மனப்பான்மையை வெளிக்கொணரவும்,
போட்டித் தேர்வுகளில் மாணவர்களை தயார் செய்யவும் வினாடி வினா போட்டி,
கதை எழுதும் போட்டி
மாணவர்களை வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபடுத்தவும்,
எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக மாற்ற கதை எழுதும் போட்டி,
புகைப்படப் போட்டி,
சதுரங்க விளையாட்டு போட்டி
உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,
சமூக ஆர்வலர்கள்,
புத்தக வாசிப்பாளர்கள்
ஆகியோர் இப்புத்தக கண்காட்சியில்
கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூல்களை வாங்கி படித்து பயனடையலாம்
என மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)
திரு.அ.முனிராஜ்,
ஓசூர் புத்தகத் திருவிழா தலைவர்
திரு.பழ.பாலசுந்தரம்,
துணைத்தலைவர்கள்
திரு.ஆ.சிவக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்
திரு.எஸ்.ஆர்.சேதுராமன்,
வட்டாட்சியர்
திரு.ஜி.குணசிவா,
மாவட்ட நூலக அலுவலர் (பொ)
திரு.சக்திவேல்,
மற்றும்
ஒருங்கிணைப்பாளர்கள்
திருமதி.இலக்கியா,
திரு.பாலகிருஷ்ணன்,
திரு.விஜயபாஸ்கர்,
திரு.சந்துரு,
மற்றும்
பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------------.