வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு
விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை
அலுவலகத்தில் காலியாக உள்ள
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு
தகுதியானவர்கள் 20.02.2026-க்குள்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 12. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை
அலுவலகத்தில் காலியாக உள்ள
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு
தகுதியானவர்கள் 20.02.2026-க்குள்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தமிழ்நாடு மாநில ஊரக
வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை
அலுவலகத்தில் காலியாக உள்ள
வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்கள் வட்டார அளவிலான
கூட்டமைப்புகளால் வழங்கப்படும்
தகுதியான நபர்கள்
வெளிச்சேவை முறையில்
நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மக்கள் அமைப்புகளின் திறன்மேம்பாடு
தேவைகளை முழுமையாக
பூர்த்திசெய்திடும் வகையில்
பர்கூர் வட்டாரத்தில்
1 காலிப்பணியிடம்,
ஓசூர் வட்டாரத்தில்
3 காலிப்பணியிடங்கள்,
காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில்
2 காலிப்பணியிடங்கள்,
கெலமங்கலம் வட்டாரத்தில்
2 காலிப்பணியிடங்கள்,
கிருஷ்ணகிரி வட்டாரத்தில்
1 காலிப்பணியிடம்,
தளி வட்டாரத்தில்
4 காலிப்பணியிடங்கள்,
ஊத்தங்கரை வட்டாரத்தில்
2 காலிப்பணியிடங்கள்,
வேப்பனப்பள்ளி வட்டாரத்தில்
1 காலிப்பணியிடம்,
சூளகிரி வட்டாரத்தில்
2 காலிப்பணியிடங்கள்,
மத்தூர் வட்டாரத்தில்
2 காலிப்பணியிடங்கள்
என மொத்தம் 10 வட்டாரங்களில் உள்ள
20 வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள்
ஏதாவது ஒரு பிரிவில்
இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
மூன்று மாத கணினி சான்றிதழ்
பெற்றிருக்க வேண்டும்.
30 வயதிற்குட்பட்டவராக
இருத்தல் வேண்டும்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு /
சுய உதவிக்குழுவில் குறைந்தபட்சம்
ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக
அனுபவம் பெற்றவராக
இருந்திருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட
வட்டாரத்தில் வசிப்பவராக
இருக்க வேண்டும்.
மேலும்,
இரு சக்கரவாகனம்
(ஓட்டுநர் உரிமம் அவசியம்)
ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாநில அளவிலான திட்டங்களில் பணிபுரிந்து பணிநீக்கம் மற்றும் நிதிதொடர்புடைய குற்றங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் நபர்கள்
11 மாத ஒப்பந்த அடிப்படையில்
சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான
கூட்டமைப்பு மூலம்
நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பங்கள்
20.02.2026 அன்று
மாலை 05.00 மணி வரை
சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான
கூட்டமைப்பிற்கு ஒப்படைப்பு
செய்யப்பட வேண்டும்
என தெரிவிக்கப்படுகிறது.
தாமதமாகவோ,
நாள் கடந்தோ வரப்பெறும்
விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும், விபரங்களுக்கு
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி (ம)
ஊராட்சித்துறை வளாகம் (மகளிர் திட்டம்),
அறை எண்.11, தரைத்தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கிருஷ்ணகிரி 635 115.
என்ற முகவரியில் அணுகலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------.