தாயுமானவர் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தாயுமானவர் திட்டம் மூலம்
03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய நாட்களில்
வயது முதிர்ந்தோர் மற்றும்
மாற்றுத்திறனாளிகளின்
இல்லத்திற்கே நேரடியாகச் சென்று
குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 1. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தாயுமானவர் திட்டம் மூலம்
03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய நாட்களில்
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்
இல்லத்திற்கே நேரடியாகச் சென்று
குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால்,
தாயுமானவர் திட்டம் மூலம் வயது முதிர்ந்தோர்
மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே
சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும்
திட்டம் - 12.08.2025 அன்று துவக்கி
வைக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் உள்ள 27,927 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்று குடிமைப் பொருட்கள் வழங்க
ஒரு நாள் குழு 155
மற்றும்
இரண்டு நாள் குழு 154
என மொத்தம் 309 குழுக்கள் அமைக்கப்பட்டு,
463 வாகனங்களை கொண்டு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
2025 - நவம்பர் 03 மற்றும் 04-ம் தேதி ஆகிய இருதேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் மூலம்
வயது முதிர்ந்தோர் மற்றும்
மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு
வீடுகளுக்கு சென்று
குடிமைப் பொருட்கள் விநியோகம்
செய்யப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.