முதலமைச்சருக்கு
நன்றி தெரிவித்த
மலைவாழ் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட
மேலூர், தொலுவபெட்டா மற்றும்
குல்லட்டி (கவனூர்) ஆகிய
மலை கிராமங்களுக்கு
சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தமைக்கு
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு நன்றியை
தெரிவித்த மலைவாழ் மக்கள்
கிருஷ்ணகிரி. பிப். 13. –
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட
மேலூர்,
தொலுவபெட்டா
குல்லட்டி (கவனூர்)
ஆகிய மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மலைவாழ் மக்கள்
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட
மேலூர், தொலுவபெட்டா மற்றும்
குல்லட்டி (கவனூர்)
ஆகிய மலை கிராமங்களில்
653 இருளர் இன மக்கள் வசித்து
வருகின்றனர்.
இப்பகுதியில் அமைந்துள்ள சாலையானது
மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.
மேலும், மழைக் காலங்களில்
சேரும் சகதியுமாக உள்ளதால்
போக்குவரத்திற்கு மிகவும்
சிரமப்பட்டு வந்தனர்.
மேலும், யானை மற்றும் வனவிலங்குகளால் பாதுகாப்பு இல்லாத நிலையில்
இச்சாலையை நாள்தோறும்
கடக்க வேண்டி உள்ளது.
மேலும்,
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்
பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கும்,
பொதுமக்களின் மருத்துவ தேவைகளை
பூர்த்தி செய்து கொள்வதற்கும்
இச்சாலைகளை அமைக்கும் பணி மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.
ஆனால் இச்சாலைகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளதால் சாலைகள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள மிகவும் காலதாமதம் ஆனதால்,
இப்பகுதி மக்கள் ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கையினை தெரிவித்து வந்தனர்.
மேலும், இப்பகுதி மக்களின் கோரிக்கையான சாலை வசதி அமைப்பது குறித்து
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு.டி.ராமச்சந்திரன்
மற்றும்
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்
ஆகியோர் ஒவ்வொரு சட்டசபை கூட்டத்திலும் எடுத்துரைத்தனர்.
அதனைத்தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
கடந்த 26.04.2025 அன்று கடைக்கோடி மலைகிராமமான தொலுவபெட்டா, காவனூர் ஆகிய கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாலை வசதி வேண்டி
மனு அளித்ததின்பேரில்,
இக்கிராமங்களை நேரில் பார்வையிட்டு,
அரசுக்கு கருத்துரு தயார் செய்து
தங்களது கோரிக்கைகள்
நிறைவேற்றித் தரப்படும் என
அக்கிராம மக்களிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் நடவடிக்கையின் பொருட்டு,
மேலூர் முதல் தொலுவபெட்டா சாலை
0/0 4/740 கி.மீ தூரத்திற்கும்,
மேலூர் -தொலுவபெட்ட சாலை முதல்
குல்லட்டி (கவனூர்) சாலை வரை
0/0-5/0 கி.மீ தூரம் என மொத்தம்
இரண்டு சாலைகளை அமைக்கும் பணிக்கு
ஒசூர் மாவட்ட வனத்துறைக்கு
நிர்வாக அனுமதி வரப்பெற்றதையடுத்து,
இச்சாலை பணிகளை
மாண்புமிகு
உணவு மற்றும் உணவுப்பொருள்
வழங்கல் துறை
அமைச்சர்
திரு.அர.சக்கரபாணி
அவர்கள் 03.02.2026 அன்று
துவக்கி வைத்தார்.
எனவே, பொதுமக்கள் தங்களது
நீண்ட வருட கோரிக்கையான
சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு தங்களது ஊர் சார்பாக
நன்றியை தெரிவித்துள்ளனர்.
புதிய சாலை பணிகளின் பயன் குறித்து
திரு.குல்மாதேஷ்
அவர்கள்
தெரிவித்ததாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடைக்கோடி மலைகிராமமான பெட்டமுகிளாலம் ஊராட்சி, குல்லட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன்.
எங்கள் கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
எங்கள் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இந்நிலையில், அய்யூர் பிரிவு சாலையிலிருந்து எங்கள் கிராமமான குல்லட்டி வரை
சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு
இதுவரை சாலை வசதி கிடையாது.
மண்சாலையில் தான் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தோம்.
மேலும், எங்கள் கிராமம் அடர்ந்த
வனப்பகுதியில் உள்ளதால்,
யானை உள்ளிட்ட வனவிலங்குகளின்
அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
எங்கள் கிராம மக்கள் தங்களது
நிலத்தில் ராகி, அவரை உள்ளிட்டவை
பயிர்செய்து வருகின்றனர்.
இங்குள்ள விளைபொருட்களை தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட
பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல
சாலையே இல்லாத நிலையில்
எங்களின் விளைபொருட்களை
மிகுந்த சிரமத்துடன் விற்பனை செய்ய
கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.
மேலும், எங்கள் கிராமத்தில் உள்ள
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்
இம்மண்சாலை வழியே தான்
பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இம்மண்சாலையை தார்சாலையாக அமைத்து தர நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தோம்.
தற்போது,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் எங்கள் கிராம மக்கள் நிலையை
அறிந்து புதிய தார்சாலை அமைக்க
உத்தரவிட்டுள்ளார்கள்.
கடைக்கோடி மக்களுக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்று
சிறப்பாக செயல்பட்டு வரும்
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு எங்கள் கிராம மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய சாலை பணிகளின் பயன் குறித்து
குல்லட்டி கிராமத்தைச் சேர்ந்த
திரு.முனிராஜ்
அவர்கள் தெரிவித்ததாவது:
நான் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மலைக்கிராமமான குல்லட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன்.
அய்யூர் பிரிவு சாலையிலிருந்து எங்கள் கிராமத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதுவரை சாலை வசதியே கிடையாது.
மேலும் எங்கள் கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாலும்,
வனத்தில் யானைகள் இருப்பதாலும்,
பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில்
சென்று வர வேண்டியுள்ளது.
மேலும், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர இயலாத நிலை உள்ளது.
நாங்கள் விவசாயிகளாகவே இருந்தாலும்
எங்கள் கிராம பகுதியில் உள்ள மாணவர்கள் கல்லூரி வரை படிக்க வைத்து வருகிறோம்.
தற்போது
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் எங்கள் கிராமத்திற்கு புதிய சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இது எங்கள் கிராம மக்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக அமைந்துள்ளது.
இதுவரையில் சாலை வசதியே கண்டிராத
எங்கள் கிராமத்திற்கு
சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கும்,
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
அவர்களுக்கும்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்களுக்கும்,
சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்
எங்கள் மலைவாழ் மக்களின் சார்பாக
நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
--------------------------------------------.