ஓசூர் சமத்துவபுரம்
ஊராட்சி ஒன்றிய
அரசு தொடக்கப்பள்ளியில்
76-வது ஆண்டு
குடியரசு தினவிழா
கொண்டாட்டம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
நிர்வாகிகள் பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 26. –
ஓசூர் சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 76-வது ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,
சமத்துவபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில் 1-வது வகுப்பு முதல் 6-வது வகுப்பு வரை 300 மாணவ, மாணவிகள் கல்வி
பயின்று வருகின்றனர்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தின் சார்பில்
இந்த அரசுப்பள்ளி
தத்தெடுக்கப்பட்டு, பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆண்டுதோறும்
அரிமா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த தொடக்கப்பள்ளியில்
2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி
76-வது ஆண்டு குடியரசு தினவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில்
மகாத்மா காந்தி
உருவப்படம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க தலைவர்
அரிமா கே.மகேந்திரன்
தலைமை வகித்து,
தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவரை தொடர்ந்து மேக்னம் அரிமா சங்க நிர்வாகிகள் பேசினார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாணவ, மாணவிகளுக்கு பரிசு
குடியரசு தினவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஓசூர் மேக்னம் அரிமா
சங்கத்தின் செயலாளர்
அரிமா. என். கண்ணன்,
சேவை திட்டத் தலைவர்
அரிமா ரவிசங்கர்,
பொருளாளர்
அரிமா பி. மாதேஷ்குமார்,
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமத்துவபுரம் அரசு தொடக்கப்பள்ளி
தலைமையாசிரியர்
பி. நாமகிரி
மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------------