கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சியில்
நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
ஒசூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில்
ரூ.5 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம்
மதிப்பில் நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஓசூர். ஜன. 21. -
ஓசூர் மாநகராட்சியில்
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில்,
ஓசூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம்
இ.ஆ.ப.,
ஆகியோர் முன்னிலையில்
இன்று (21.01.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
ஓசூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகளான
குடிநீர் விநியோகம்,
சாலை விரிவாக்க பணிகள்,
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள்,
தெரு விளக்கு அமைத்தல்,
பேருந்து நிலையம்,
வணிக வளாக கட்டுமான பணிகள்
உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ஜனவரி 21-ம் தேதியன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும்
பணிகளை துரிதபடுத்த வேண்டும்.
மேலும், போக்குவரத்துக்கு இடையூராக சாலையோரம் ஆக்கிரமிப்பவர்கள்
மீது சட்டப்படி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
முன்னதாக,
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்,
ஈச்சங்கூர் மற்றும் பெலத்தூர் ஊராட்சிகளில்
ரூர்பன் திட்டத்தின் கீழ்,
ரூ.50 லட்சம் மதிப்பில்
பயோ பெஸ்டி சைடு,
ரூ.205 லட்சம் மதிப்பில்
கோல்டு ஸ்டோரேஜ்,
ரூ.225 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள
இண்டோர் ஸ்டேடியம்,
ரூ.53.30 லட்சம் மதிப்பில்
பேவர் பிளாக்
அமைக்கப்பட்டு வருவதை
நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
மேலும்,
பெலத்தூர் ஊராட்சியில்
மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ்,
ரூ.9.90 லட்சம் மதிப்பில்
மூன்று நாற்றங்கால்
பண்ணையில்
புங்கன்,
வேப்பம்,
பாதாம்,
நாவல்
மகா கனி
உள்ளிட்ட 40,000 மரக்கன்று
உற்பத்தி செய்யும் பணிகள்
ஆய்வு செய்யப்பட்டது.
குறுங்காடுகள்
தொடர்ந்து,
ஒசூர் வட்டம், சென்னத்தூரில்,
சமூக பொறுப்பு நிதியுதவியுடன்
அரசு புறம்போக்கு நிலங்களை
குறுங்காடுகளாக மாற்றும் திட்டத்தின்
ஒரு பகுதியாக
டைட்டன் நிறுவனம் மற்றும்
பயோட்டாசோயில் ஃபவுண்டேஷன்
இணைந்து அறிவியல் முறையில்
ஆய்வு செய்து,
டைட்டான் வனம் திட்டம்
மூலம் முதல்கட்டமாக
டைட்டன் நிறுவனத்தில்
33 ஏக்கர் பரப்பளவிலும்,
பில்லனக்குப்பம் ஊராட்சியில்
12 ஏக்கர் என மொத்தம்
45 ஏக்கர் நிலப்பரப்பில்
மியாவாக்கி முறையில்
2 லட்சத்து 5 ஆயிரம் மரக்கன்றுகள்
23.04.2025 அன்று நடவு செய்யப்பட்டது.
நடவு செய்யப்பட்ட 1.50 லட்சம்
பல்வேறு வகையான செடிகளில்
தற்போது 1.30 லட்சம் மரங்கள்
5 அடி முதல் 6 அடி வரை வளர்ந்து
அடர்ந்த வனமாக உருமாறியுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்,
சென்னசந்திரம் ஊராட்சியில்
சமூக நலத்துறை சார்பாக
இயங்கி வரும் தோழி விடுதியில்
பெண்களுக்கு வழங்கப்படும்
உணவு, குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
அந்திவாடியில் உள்ள
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணைய விளையாட்டு அரங்கில்
இண்டோர் ஸ்டேடியம், நீச்சல் குளம்
ஆகியவற்றை பார்வையிட்டு,
கூடுதல் அடிப்படை வசதிகள்
மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்
திரு.ரமேஷ்,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தைய்யா,
நெடுஞ்சாலைத்துறை
உதவி கோட்டப்பொறியாளர்
திரு.முருகன்,
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சக்தி சுபாசினி,
உதவி செயற்பொறியாளர்
திரு.சுப்ரமணி,
வட்டாட்சியர்
திரு.குணசிவா,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.வெங்கடேசன்,
திரு.சிராஜுதின்,
பயோட்டாசோயில்
ஃபவுண்டேஷன் நிறுவனர்
திரு.செந்தில்குமார்
மற்றும் துறை சார்ந்த
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.