சதுப்பு நிலங்களை அழிவிலிருந்து
மீட்டெடுப்போம்
நிலத்தடி நீர் வளம் காப்போம்
பிப்ரவரி – 2 - உலக சதுப்பு நில நாள் (அ) ஈரநிலங்கள் தினம் World Wetlands Day
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப்ரவரி. 2. –
உலக சதுப்பு நிலம் என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்துகொள்ள கொண்டாடப்படும் நாள். இந்த சதுப்பு நில நாள் பிப்ரவரி இரண்டாம் தேதி கொண்டாடப்படுகிறது.
பூமியில் 6 சதவீத பகுதி
சதுப்பு நிலங்கள்
உலகில் உவர்நீர்
நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.
பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக இருக்கிறது.
இவை பெரும்பாலும்
இயற்கையாக உருவானவை,
மனிதனால் உருவாக்கப்பட்டவை,
என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப் பட்டிருக்கிறது.
அலையாத்திக்காடுகள்,
குட்டைகள்,
உள்ளிட்டவை இயற்கையாக உருவானது என்றும்
ஏரிகள்
குளங்கள்
நீர் தேங்கும் இடங்கள்
ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்நிலைகளை
பாதுகாப்போம்
1971-இல் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து விவாதித்து சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். இதே நாளை உலக சதுப்புநில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்.
கேயாஸ் தியரி
பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித்தான் நாம் செய்யும் சின்னச் சின்ன சூழலியல் தவறுகளும் நம் சந்ததியை பாதிக்கிறது.
நாம் அனைவரும் வகைதொகை இல்லாமல் சுற்றுச்சூழலை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம்.
மலைகள் முழுவதும் பிளாஸ்டிக் மேடுகள் ஆகி நிலங்களை கடல் நீரை மாசுபடுத்தி சதுப்பு நிலக்காடுகள் சாகடித்து இயற்கையை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றில் மற்றவற்றைவிட சதுப்பு நிலங்கள் இன்றைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
எதற்கும் உதவாத சாதாரண நிலங்கள் தானே என்று நாம் அலட்சியமாக இருப்பதால் தான் இப்படி ஒரு விளைவு ஏற்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனால் பருவம் தவறி மழை பெய்கிறது. நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னணியில் நாம் தான் இருக்கிறோம்.
ஈரநிலங்கள்
அது என்ன ஈரநிலங்கள் என்ற கேள்வி எழும். உலகெங்கிலும் உள்ள
ஈரமான புல்வெளிகள்,
ஆறுகள் கழிமுகங்கள்,
கடலோரப் பகுதிகள்,
பவளத் திட்டுகள்,
நிலங்கள், குளம் குட்டைகள்,
ஏரிகள் குளங்கள்,
நீர்த்தேக்கங்கள்,
நெல்வயல்கள்,
சதுப்பு நிலக்காடுகள்,
உள்ளிட்டவற்றை ஈரநிலங்கள் என்று சொல்கிறோம்.
அழிந்து வரும் ஈரநிலங்கள்
கடலுக்கும் நிலப்பகுதிக்கும்
இடையே ஆழம் குறைந்த ஆண்டு முழுவதும் நீர் தேங்கியிருக்கும் நிலப்பரப்புகளை சதுப்பு நிலங்கள் என்று நாம் சொல்கிறோம். உண்மையில் ஈர நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் ஆபத்தில் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கேற்ப அந்த அழிவை தடுப்பதற்காக ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
பெருகிவரும் நகரமயமாதல்,
புதிதாக உருவாகும் குடியிருப்புகள்,
ரியல் எஸ்டேட்,
சுற்றுலாத்தலங்கள் அமைத்தல்,
நீர் தேக்கங்கள் அமைத்தல்,
போன்றவற்றிற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களால்தான் சதுப்பு நிலங்கள் அழிவை சந்தித்து வருகின்றன. நிலத்தடி நீர் வளம் குறைகிறது முக்கியமாக நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்று போகிறது.
-----------------------------------------.